அமைச்சர் துரைமுருகனுக்கு அப்பல்லோவில் தொடர் சிகிச்சை!
சென்னை: கால் வலியால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சராகவும், தி.மு.க., பொதுச்செயலராகவும் இருப்பவர் துரைமுருகன், 87; வயது மூப்பால் வரும் பிரச்னைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். இரு வாரங்களுக்கு முன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், வீட்டில் தவறி விழுந்த துரைமுருகன், அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று, அவரிடம் நலம் விசாரித்தார்.
துரைமுருகன் உடல்நிலை குறித்து, அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் அனில் பி.ஜி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கால் வலி காரணமாக துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. கால் வலிக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எந்த பிரயோஜனமம் இல்லை
மக்கள் பணத்தில்
எழுந்து வருவார்.
ஸ்டாலின் அப்போலோவை தொடர்பு கொண்டு மருத்துவர்களிடம் கொடுக்கும் மருந்துகளை கேட்டறிந்திருப்பாரே. ஆட்சிக்கு வந்தால் உதயநிதியின் கீழ் துணை முதல்வர் அவர் தான் என்று சொல்லிப்பாருங்க.
அவர் சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தமா ஓய்வு, அதாவது அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கவேண்டும் கூறி இருக்கவேண்டும் மருத்துவரே.
விடியல் ஆட்சி வருவதற்கு முன்னால், அவ்வப்போது அப்பல்லோ சென்ற லார்டு முருகா , விடியல் ஆட்சி வந்த பின் எப்போதாவதுதான் வீட்டுக்கு போகிறார்.