கடன் வசதி, வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தும் ராஜஸ்தான், உ.பி., பீஹார்

புதுடில்லி: ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்கள், 2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளன. கடன் வசதி, வீட்டுவசதி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு என, பல்வேறு அம்சங்களில் இந்த மாநிலங்கள் கவனம் செலுத்தி உள்ளன.

ராஜஸ்தான்

*முனைவோர் தனியார் கடன்களை நம்பியிருப்பதை குறைக்கும்

*வீடுகளுக்கான குழாய் நீர் இணைப்புகளுக்கு, 6,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், தண்ணீர் வாங்குவதற்காக மக்கள் செலவிடும் தொகையை மிச்சப்படுத்தும்

*சாலை மேம்பாட்டிற்காக, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து செலவை குறைப்பதோடு, வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும்.

உத்தர பிரதேசம்

*உ.பி.,யின், 9.13 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு மற்றும் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது

*மாநிலம் முழுதும் புதிய திறன் பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படும். குறிப்பாக, பொது -தனியார் பங்களிப்பில், வேலைவாய்ப்பு மையங்கள் உருவாக்கப்படும்

*பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், குடும்ப வருமானத்தை பெருக்கவும் அவர்களுக்கென தனி திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்

*பெண்களின் திருமணத்திற்கான நிதி உதவி, 50,000- ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது, நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு பெரிய நிதியுதவியாக இருக்கும்.

பீஹார்

*பீஹாரின் பட்ஜெட்டில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

*கிராமப்புறங்களில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக, 1,013 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது ஏழை குடும்பங்களின் வீட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும்

*குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த, 633.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது எதிர்கால மருத்துவ செலவுகளை குறைக்க உதவும்

*கிராமப்புறங்களில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சிறு தொழில்களை ஊக்குவிக்க, 1,184 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கிராமப்புற குடும்பங்களின் நிலையான வருமானத்திற்கு வழிவகுக்கும்.

Advertisement