தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக கூடாது மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடில்லி: “தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக கூடாது; அவற்றை பயன்படுத்தி திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்,” என, மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

நாடு முழுதும் 10வது மற்றும் பிளஸ் - 2 பொது தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2018 முதல் 'பரீக் ஷா பே சர்ச்சா' என்ற நிகழ்ச்சியை நடத்தி, அவர்களிடையே கலந்துரையாடுவதை பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாக வைத்துள்ளார்.

கலந்துரையாடல் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக, இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பதிப்பு டில்லியில் நேற்று நடந்தது.

குஜராத்தின் தேவ்மோர்கா, தமிழகத்தின் கோவை, சத்தீஸ்கரின் ராய்ப்பூர், அசாமின் குவஹாத்தி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். அப்போது மோடி பேசியதாவது:

தேர்வுக்கு நன்கு தயாரான பின், ஒருபோதும் நீங்கள் பதற்றமாக உணர மாட்டீர்கள். ஒரு நல்ல இரவு துாக்கம், நாள் முழுதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

தேர்வில் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும். பெற்றோர், தங்கள் குழந்தைகளை பிற மாணவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உணவுகளை வீணாக்கக் கூடாது. கழிவுகளை குறைக்க வேண்டும். நம் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமானது. அது இல்லாவிட்டால், எவ்வளவு உழைப்பு இருந்தாலும் பயனில்லை. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில்நுட்பம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது.

செயற்கை நுண்ணறிவு இதை கண்டு நாம் பயப்பட தேவையில்லை. அத்தியாவசிய தேவையாக உள்ள மொபைல் போன் மற்றும் சமீபகாலமாக அதிகரித்து வரும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவை நம் எஜமானர்களாக இருக்கக் கூடாது.

அவற்றை சரியாக பயன்படு த்தி தங்கள் திறமைகளை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்களுக்கு நாம் அடிமையாக கூடாது. அவற்றை பயன்படுத்தி நம் திறமை களை வளர்த்து கொள்ள வேண்டும்.

ஏ .ஐ., தொழில்நுட்பத்தை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. அதை முறையாக பயன் படுத்த வேண்டும். கற்றலுக்கு மாற்றாக அல்ல; வழிகாட்டுதலுக்கும், மதிப்பு கூட்டலுக்கும் ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட வேண்டும்.

இவ்வா று அவர் பேசினார்.

Advertisement