பைக் மீது கார் மோதல் கார்மென்ட்ஸ் ஓனர் பலி
ஆத்துார்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நாக குப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன், 36. இவரது மனைவி கலைவாணி, 32. இவர்கள் அதே ஊரில் கார்மென்ட்ஸ் தொழில் செய்தனர்.
அங்கு கலைவாணியின் தம்பி மணிகண்டன், 28, தையல் தொழிலாளியாக பணிபுரிகிறார். இவர்கள், சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே தென்னங்குடிபாளையத்தில் உள்ள உறவினரை பார்க்க, நேற்று முன்தினம் மாலை வந்தனர்.தொடர்ந்து நேற்று காலை, 'ஸ்பிளண்டர்' பைக்கில் புறப்பட்டனர். ஹெல்மெட் அணிந்து மணிகண்டன் ஓட்டினார். காலை, 8:30 மணிக்கு, உப்பு ஓடையில் உள்ள, ஆத்துார் புறவழிச்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, வாழப்பாடியில் இருந்து தியாகதுருகம் சென்றுகொண்டிருந்த, 'ஸ்விப்ட்' கார், பைக் பின்புறம் மோதியது. தம்பதியர், சாலையோரம் உள்ள, 10 அடி பள்ளத்தில் ஒருவர் மீது ஒருவராக விழுந்தனர். மணிகண்டன் சாலையில் விழுந்தார். படுகாயம் அடைந்த மூவரையும், மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு கலைவாணி உயிரிழந்தார்.
கவலைக்கிடமான நிலையில் இருந்த லோகநாதனை, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆத்துார் டவுன் போலீசார், காரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.
மேலும்
-
மாநிலங்கள்தோறும் மருத்துவ மையங்கள்: லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் உறுதி
-
செய்திகள் சில வரிகளில்
-
இத்தாலி ஹாலிவுட் பட பாணியில் நடந்த கொள்ளை முயற்சி
-
2027 ஏப்ரல் முதல் புதிய வாகன சோதனை முறை: கார்கள் விலை உயர வாய்ப்பு
-
பிரான்ஸ் 55 ஆண்டுகளில் 89 சிறார்கள் ஆசிரியர் பாலியல் லீலை
-
வங்கதேசம் ஆட்சி அதிகாரத்தில் யார்? இன்று தேர்தல் முடிவு