பிரான்ஸ் 55 ஆண்டுகளில் 89 சிறார்கள் ஆசிரியர் பாலியல் லீலை
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஒருவர், இந்தியா உட்பட 10 நாடுகளில், 55 ஆண்டுகளில், 89 சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் நியூ காலிடோனியாவில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜாக் லெவ்யூக்ளே, 79. இவர், 55 ஆண்டுகளுக்கு மேலாக, தன்னிடம் படிக்க வந்த சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த 1967 முதல் 2022 வரை அவர் இத்தகைய கொடுமையை அரங்கேற்றியுள்ளார்.
அவரது உறவினர் ஒருவர் கண்டெடுத்த 'பென்டிரைவ்'வில், இது தொடர்பாக ஜாக் எழுதி வைத்திருந்த ஆவணங்கள் சிக்கின. இதன் வாயிலாக 89 பாதிக்கப்பட்ட சிறார்களை போலீசார் அடையாளம் கண்டனர்.
அவர், பிரான்ஸ் மட்டுமின்றி, இந்தியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் பாலியல் லீலைகளை நிகழ்த்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும்
-
மாநிலங்கள்தோறும் மருத்துவ மையங்கள்: லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் உறுதி
-
செய்திகள் சில வரிகளில்
-
இத்தாலி ஹாலிவுட் பட பாணியில் நடந்த கொள்ளை முயற்சி
-
2027 ஏப்ரல் முதல் புதிய வாகன சோதனை முறை: கார்கள் விலை உயர வாய்ப்பு
-
வங்கதேசம் ஆட்சி அதிகாரத்தில் யார்? இன்று தேர்தல் முடிவு
-
தங்கம், வெள்ளி விலை நிலவரம்