செய்திகள் சில வரிகளில்
மாணவர்கள் மீது தாக்குதல்
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில், 13 வயது சிறுவன், கத்தியால் குத்தியதில், இரண்டு சிறுவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய சிறுவன், அந்தப் பள்ளியின் மாணவர் இல்லை என்பதும், தாக்குதல் நடத்தியபோது, 'அல்லாஹூ அக்பர்' என்று முஸ்லிம் மத கோஷத்தை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. தப்பியோடிய சிறுவன், சில மணி நேரத்தில் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
புயலில் 20 பேர் பலி
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது ஆப்ரிக்க நாடான மடகாஸ்கர் தீவு. இங்கு நேற்று முன்தினம், 195 கி.மீ., வேகத்தில் பலத்த புயல் வீசியது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களில், 20 பேர் உயிரிழந்துள்ளனர்; 19 பேர் காயமடைந்துள்ளனர்.
பள்ளியில் துப்பாக்கிச்சூடு
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் ஷோங்கலா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த, 18 வயது இளைஞர், சரமாரியாக சுடத் துவங்கினார். போலீசார் விரைந்து வந்து, அவரை சுட்டுக் கொன்றனர். எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
மேலும்
-
ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு; பிரதமர் மோடி
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.3,120 சரிவு
-
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை... இஸ்ரேலுக்கு தீராத சந்தேகம்
-
வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு
-
பாகிஸ்தானை திணறடித்த எஸ்-400 ஏவுகணைகள்; ரூ.10 ஆயிரம் கோடிக்கு வாங்கும் இந்தியா
-
ஏர் இந்தியா விமான விபத்து; இத்தாலி அறிக்கையை மறுத்தது விசாரணை ஆணையம்