தி.மு.க.,வின் ரவுடிகள் ராஜ்ஜியத்துக்கு முடிவு: பா.ஜ.,

6

சென்னை: ''தி.மு.க.,வின் ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கும், பெண்களுக்கு ஏதிரான அராஜகத்திற்கும் முடிவு கட்ட, அனைவரும் ஒன்றினைய வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி தெரிவித்தார்.


தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து, தமிழக பா.ஜ., மகளிர் அணி சார்பில், நேற்று மாலை மாநிலம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில், சிவானந்தா சாலையில் நடந்த, கண்டன ஆர்ப்பாட்டத்தில், வானதி, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் குஷ்பூ, அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி உட்பட, தே.ஜ., கூட்டணி கட்சிகளை சேர்ந்த மகளிர்அணியினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

வானதி: தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும், அனைத்து குற்றங்களின் பின்னணியிலும், தி.மு.க., நிர்வாகிகள் உள்ளனர். தி.மு.க.,வின் ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கும், பெண்களுக்கு ஏதிரான அராஜகத்திற்கும் முடிவு கட்ட, அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி: கோவையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். முதல்வர் ஸ்டாலின் மகளுக்கு அல்லது தங்கைக்கு, இதுபோன்று நடந்தால், சும்மா இருப்பாரா?

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் குஷ்பூ: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்துள்ளது. எனக்கு வேலைக்கு செல்லும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் வீட்டில் இருந்து சென்றால், திரும்பி வரும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர்கள் பேசினர்.


@block_P@

மூன்று மாதங்களுக்கு பின் மகளிர் அணி ஆர்ப்பாட்டம்


கோவை கல்லுாரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பா.ஜ., மகளிர் அணி சார்பில், கடந்த ஆண்டு நவ., 6ம் தேதி, தமிழகம் முழுதும், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்பின், பா.ஜ., மகளிர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.block_P

Advertisement