'பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்போம்': தே.மு.தி.க., நிர்வாகி மிரட்டல் பேச்சு
சென்னை: “பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்போம்,” என, தே.மு.தி.க., பூத் நிர்வாகிகள் கூட்டத்தில், பொதுச்செயலர் பிரேமலதா முன்னிலையில், தேர்தல் பொறுப்பாளர் பேசினார்.
சென்னையை அடுத்த அம்பத்துாரில், தே.மு.தி.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச்செயலர் பிரேம லதா, பொருளாளர் சுதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாரி பேசியதாவது: எனக்கு சிறை புதிதல்ல; மூன்று முறை சிறைக்கு சென்றுள்ளேன். அதுவும், பத்திரிகையாளர்களை அடி த்துதான் சிறைக்கு சென்றேன். எனக்கு மிகவும் கோபம் வருகிறது. மறுபடியும் சொல்கிறேன்; இது சரியில்லை. பத்திரிகையாளர்களை, நாளை வீடு புகுந்து அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். கண்டிப்பாக இது நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
சட்டசபை தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகம் துவங்கியும், மனு வாங்க யாரும் வராததால், தே.மு.தி.க., தலைமை அலுவலகம் வெறிச்சோடியதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, அவர் பேசினார். கட்சி நிர்வாகியின் மிரட்டல் பேச்சை, பொதுச்செயலர் பிரேமலதா கைதட்டி ரசித்தார்.
ஐயா மயில் இறகால் தடவுவதை பார்த்தால் முன்னாள் சிறுத்தையாக இருந்து , உடன்பிறப்பாக மாறி பிறகு தேதிமுகாவில் சேர்ந்தவர் போல தெரிகிறது .
தேமுதிகவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டால் பத்திரிகையாளர்கள் சந்திக்கமாட்டார்கள்.
தேர்தல் ஆணையம் உடனே இந்த மிரட்டலுக்கு அவர் மீது தகுந்த நடவடிக்கைளை எடுக்க வேண்டும் இல்லையே இது போன்று இனி நாளை பன் மடங்கு தேர்தல் வருமுன் தமிழ் நாட்டில் கிளம்பும் பிறகு கட்டுக்கடங்காமல் போயிடும் எச்சரிக்கைமேலும்
-
ஏஐ மாநாடு நடப்பதால் 380க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
-
இதெல்லாம் ரொம்ப டூ மச்; முன்னாள் அதிபர் பேசியது பிடிக்காததால் சுவிட்சர்லாந்துக்கு வரி விதித்தார் டிரம்ப்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மத்திய அரசு
-
திமுக அரசுக்கு ஆதரவான மனநிலை: முதல்வர் ஸ்டாலின்
-
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்
-
சீனா, ஜப்பான், பிரான்சை விட வந்தே பாரத் ஏசி ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்