ஈரோட்டில் இளம்பெண் படுகொலை குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படை
ஈரோடு: ஈரோட்டில், 32 வயது மதிக்கத்தக்க பெண்ணை கொடூரமாக கொலை செய்த ஆசாமியை, போலீசார் தேடுகின்றனர்.
ஈரோடு ரங்கம்பாளையம் ரிங் ரோடு ரயில்வே பாலம் அருகே, புதர்மண்டிய காலியிடம் உள்ளது. தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 1.5 கி.மீ., துாரத்தில் உள்ளது. இப்பகுதியில் வீடுதோறும் டூவீலரில் பால் வினியோகிக்கும் வேல்முருகன், இந்த வழியே நேற்று காலை சென்றார். அப்போது நிர்வாண நிலையில், 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கிடப்பதை பார்த்துள்ளார். அவர் தகவலின்படி ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் சென்று விசாரணை நடத்தினர். பெண்ணின் முகம் சிதைந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். அருகில் அவர் அணிந்திருந்த சிவப்பு-பச்சை நிற கவுன் கிடந்தது. சிகரெட் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
இறந்த பெண்ணின் ஒரு கையில் விசிட்டிங் கார்டு இருந்தது. அதை அடிப்படையாக கொண்டு பெண்ணை அடையாளம் காண போலீசார் முயற்சிக்கின்றனர். கொலை, 24 மணி நேரத்துக்கு முன் நடந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. குற்றவாளியை பிடிக்க டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலையான பெண் பெருந்துறை வாய்க்கால்மேட்டை சேர்ந்த நர்மதா, ௨௩, என தெரியவந்துள்ளது.
மேலும்
-
ஏஐ மாநாடு நடப்பதால் 380க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
-
இதெல்லாம் ரொம்ப டூ மச்; முன்னாள் அதிபர் பேசியது பிடிக்காததால் சுவிட்சர்லாந்துக்கு வரி விதித்தார் டிரம்ப்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மத்திய அரசு
-
திமுக அரசுக்கு ஆதரவான மனநிலை: முதல்வர் ஸ்டாலின்
-
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்
-
சீனா, ஜப்பான், பிரான்சை விட வந்தே பாரத் ஏசி ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்