அனைத்து ஒப்பந்தங்களுக்கு தெளிவான மனநிலையுடன் பேச்சு; மத்திய அரசு
புதுடில்லி: இந்தியா எப்போதும் அனைத்து ஒப்பந்தங்களையும் தெளிவான மனநிலையுடன் பேச்சு நடத்தியது. நமது விவசாயிகள், மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: கடந்த ஆண்டில் நாங்கள் செய்து கொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் பாருங்கள். நாங்கள் மேற்கொண்ட 5 ஒப்பந்தங்களும் அனைத்து துறைகளையும் பாதுகாக்கும் வகையில் இருக்கும். இந்தியா எப்போதும் அனைத்து ஒப்பந்தங்களையும் தெளிவான மனநிலையுடன் பேச்சு நடத்தியது.
நமது விவசாயிகள், மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். நாங்கள் தங்களது நிலைப்பாட்டை கூட்டாளி நாடுகளுடன் மிக தெளிவாக கூறியுள்ளோம். அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், நமது உறபத்தி துறைக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும். எந்த தடையும் இன்றி வளர முடியும். இந்திய ஏற்றுமதியாளர்கள் போட்டியாளர்களுடன் போட்டியிட முடியும்.
இந்திய ஏற்றுமதிகள் கடந்த ஆண்டை போலவே வளர்வது மட்டுமல்லாமல் வரும் ஆண்டுகளில் சிறப்பாக செயல்படுவதை காணலாம். இந்திய பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா குறைத்துள்ளது. ஏற்றுமதியாளர்களும், பங்குதாரர்களும் திருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
கடன் வசதி, வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தும் ராஜஸ்தான், உ.பி., பீஹார்
-
விவசாயிகள் நலனை விற்ற காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
-
அமைச்சர் துரைமுருகனுக்கு அப்பல்லோவில் தொடர் சிகிச்சை!
-
ரயிலில் இருந்து விழுந்த மும்பை நபர் பலி; காப்பாற்ற முயன்ற மனைவியும் இறந்த சோகம்
-
திமுக தான் காங்கிரசின் அடிமை: இபிஎஸ்
-
சட்டசபை தேர்தல் பணிகள் ஆய்வு; சென்னையில் தேர்தல் கமிஷனின் 7 பேர் குழு ஆலோசனை