தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அது அவர்கள் கூட்டணிக்காக சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன். அதாவது கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் இருந்து, தமிழகத்தில் இதுவரை திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது. நான் உங்களுக்கு பல முறை சொல்லி இருக்கிறேன்.
ஆட்சிக்கு வருவோம் என்று உறுதியான நிலை இருந்த போது, கூட்டணி இருந்தால் என்ன, கூட்டணி இல்லாவிட்டால் என்ன? இருந்தாலும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, முதல்வர் அவ்வாறு சொல்லி இருக்கிறார். நாங்கள் 200 தொகுதியில் ஜெயிப்போம். தேசிய ஜனநயாக கூட்டணி நிச்சயமாக 200 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக முதல்வர் ஸ்டாலின் சொன்னது மாதிரி, அவர்களுடைய கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா அல்லது விஜய் கட்சிக்கு போவார்களா என்பது தான் இப்போது கேள்விக்குறி.
இருந்தாலும் டில்லியில் ராகுலை கனிமொழி சந்தித்து இருக்கிறார். இந்த சூழலில் இன்று முதல்வர் இப்படி சொல்லி இருப்பதை பார்த்தால், அவர்களுக்கு அச்சமும், பயமும் இன்னைக்கு அவர்களிடம் இருக்கிறது. அதனால் இன்றைக்கு கூட்டணி பலம் இல்லாமல் இருக்கிறார்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
இந்த முறை அப்படி அல்ல. தேர்தல் அன்பளிப்பு வீட்டிற்கு 5 லட்சம் கொடுக்கப்படும். இது போனால் யாரால் செய்ய முடியும். தமிழக மக்கள் கேனால் பட்டு கிடைக்கும் ஜென்மங்கள் என்பது எங்கள் வியூகம் அமைப்பாளர்கள் கண்டு கொண்டுள்ளார்கள். அறுவடை ஏக மாக இருக்கும். மற்ற தெல்லாம் கிட்ட கூட எங்களை நெருங்க முடியதில்ல.
பாஜாகாவும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது, இப்போ காலம் மாரிபோச்சு. 3 முறை வந்தது, so, திமுகவும் வரலாமில்ல.மேலும்
-
கடன் வசதி, வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தும் ராஜஸ்தான், உ.பி., பீஹார்
-
விவசாயிகள் நலனை விற்ற காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
-
அமைச்சர் துரைமுருகனுக்கு அப்பல்லோவில் தொடர் சிகிச்சை!
-
ரயிலில் இருந்து விழுந்த மும்பை நபர் பலி; காப்பாற்ற முயன்ற மனைவியும் இறந்த சோகம்
-
திமுக தான் காங்கிரசின் அடிமை: இபிஎஸ்
-
சட்டசபை தேர்தல் பணிகள் ஆய்வு; சென்னையில் தேர்தல் கமிஷனின் 7 பேர் குழு ஆலோசனை