வன்முறையாக மாறிய போராட்டங்கள்; மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!

டெஹ்ரான்: நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரினார்.


ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் கொந்தளித்துள்ள மக்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டங்களை ஆட்சியாளரான மதகுரு கமேனி ஒடுக்கி வருகிறார்.
பொதுமக்கள் மீதான ஆளும் அரசின் தாக்குதல்கள் பெரும் கண்டனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், போர்க்கப்பல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பினார்.


நாடு தழுவிய போராட்டங்களுக்கு அடக்குமுறையை பொதுமக்கள் கோபமாகக் கண்டித்தனர். இந்த சூழலில் ஈரான் தனது 47வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இந்த நிறைவு விழாவில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பேசியதாவது: நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


போராட்டங்கள் மற்றும் வன்முறையால் மக்கள் அனுபவித்த துயரங்களை நான் அறிவேன். மக்கள் முன் நாங்கள் வெட்கப்படுகிறோம், மேலும் இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் மக்களுடன் மோதலை நாடவில்லை.
இவ்வாறு ஈரான் அதிபர் கூறினார்.

Advertisement