அதிபர் பேசியது பிடிக்காததால் சுவிஸ்க்கு வரி விதித்த டிரம்ப்
வாஷிங்டன் : சுவிட்சர்லாந்தின் முன்னாள் அதிபர் பேசிய விதம் பிடிக்கவில்லை. அதனால், வரியை 39 சதவீதமாக உயர்த்தினேன், என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக கடந்தாண்டு ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், உலக நாடுகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளையும், வரிகளையும் விதிக்கத் துவங்கினார். சில நேரம் அவரது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பலரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில், அந்தக் கூற்றை டிரம்ப்பே நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 'பாக்ஸ் பிசினஸ்' என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த டிரம்ப், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்திற்கு விதித்த வரியை, திடீரென உயர்த்தியதற்கு கொடுத்த அதிர்ச்சி காரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
சுவிட்சர்லாந்து உடனான வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக, அந்நாட்டு பொருட்களுக்கு 30 சதவீத வரி விதிக்க முடிவு செய்தேன். இதனால், அப்போதைய அதிபர் காரின் கெல்லர் சட்டர் என்னுடன் தொலைபேசியில் பேசினார்.
அந்த அழைப்பின்போது, நாங்கள் சிறிய நாடு, இதைச் செய்ய முடியாது என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அது மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அவர் என்னிடம் பேசிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை. எனவே, வரியைக் குறைப்பதற்கு பதிலாக, 30 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயர்த்தினேன்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
இந்த பேட்டி, டிரம்பின் வர்த்தக கொள்கையில் தனிப்பட்ட உணர்வுகளும் பங்கு வகிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
@block_B@ பாலத்தில் பங்கு கேட்கிறார் அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணங்களை இணைக்கும் வகையில், டெட்ராய்ட் நதி மீது 2.4 கி.மீ., நீளத்தில் கோர்டி ஹவ் சர்வதேச பாலம் கட்டப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்துக்கு தீர்வாக, 3.14 லட்சம் கோடி ரூபாயில், இந்த பாலத்தை கனடா கட்டியுள்ளது; விரைவில் திறக்கப்பட இருந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமூக வலைதள பதிவில், 'கனடா அமெரிக்காவை பல ஆண்டுகளாக மிக மோசமாக நடத்தி வருகிறது. இந்த பாலத்தைத் திறக்க அனுமதிக்க மாட்டேன். அமெரிக்காவுக்கு முழு இழப்பீடு கொடுத்து, குறைந்தபட்சம் பாதி உரிமையை கனடா ஒப்படைக்கும் வரை பாலம் திறக்கப்படாது' என குறிப்பிட்டுள்ளார்.block_B
மேலும்
-
வங்கதேச பொதுத்தேர்தல் முதல் உலககோப்பை- இந்தியா-நமீபியா பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப் 12)!
-
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சு; கடந்த கால தாக்குதலை நினைவூட்டிய அதிபர் டிரம்ப்!
-
பூமிக்கருவில் ஒளிந்திருக்கும் உயிர் ரகசியம்
-
சூரிய பலகைகளுக்கு பாசி தரும் பாடம்
-
எழுத்தறிவுக்கு முன்பே பிறந்ததா எண் அறிவு?
-
அறிவியல் துளிகள்!