வங்கதேச பொதுத்தேர்தல் முதல் உலககோப்பை- இந்தியா-நமீபியா பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப் 12)!

1

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 12) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?


@1brஅது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.


* 2024ல் ஷேக் ஹசீனா பதவி விலகியதை தொடர்ந்து, வங்கதேசத்தில் இன்று (பிப்ரவரி 12) பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் காந்திருத்து ஓட்டளித்து வருகின்றனர்.


* புதுச்சேரி சட்டசபையில் இன்று காலை 9.30 மணியளவில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.


* நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களை எதிர்த்து இன்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.


* சென்னை கிண்டியில் நடந்த செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி மதிப்பில் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் 71 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

3 போட்டிகள்



* டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (பிப்ரவரி 12) இந்தியா-நமீபியா பலப்பரீட்சை நடக்கிறது. டில்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.



* காலை 11 மணிக்கு பல்லேகெலேவில் நடக்கும் போட்டியில் இலங்கை- ஓமன் அணிகள் மோதுகின்றன.


* மதியம் 3 மணிக்கு மும்பையில் நடக்கும் போட்டியில் இத்தாலி- நேபாளம் அணிகள் மோதுகின்றன.


* மாசி மாத வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு; முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு, வரும் 17ம் தேதி வரை தரிசனம் செய்யலாம்.

Advertisement