ஊரக வளர்ச்சித் துறை  அலுவலர் போராட்டம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகேவேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.மாநில துணைத் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர்காசிநாத துரை முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டதலைவர் விஜயராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினர்.

ஊரகவளர்ச்சித் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்குத் தேர்வு நிலை, சிறப்பு நிலை, மற்றும் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட பொருளாளர் அருண்குமார் நன்றி கூறினார்.

* கடலாடி யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தார். வட்டக் கிளை செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.

வட்டக் கிளை தலைவர் பிரணவநாதன் உட்பட ஏராளமான அலுவலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள 1500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்குவதோடு அவர்களை தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக கடலாடி யூனியன் அலுவலகத்தில் அத்தியா வசிய பணிகள் பாதிக்கப் பட்டது. குறிப்பாக வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட இதர ஊரக வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement