இரு கூட்டணிகளிடமும் தேமுதிக பேச்சுவார்த்தையா: பிரேமலதா மறுப்பு
சென்னை: ''இரண்டு கூட்டணியிலும், தே.மு.தி.க., பேசுவதாகக் கூறுவது தவறான தகவல்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
தே.மு.தி.க., கொடி நாளையொட்டி, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கொடியேற்றிய பின், பிரேமலதா அளித்த பேட்டி: தே.மு.தி.க.,வினர் திரளாக விருப்ப மனு கொடுக்கின்றனர். வரும் தேர்தலில், தே.மு.தி.க., அங்கம் வகிக்கும் கூட்டணி, மகத்தான வெற்றி கூட்டணியாக இருக்கும். நாங்கள் இரண்டு கூட்டணியிலும் பேச்சு நடத்துவதாகக் கூறுவது தவறான தகவல். எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை, தே.மு.தி.க., அமைக்கும்.
கூட்டணியை உரிய நேரத்தில், கட்சியினருடன் கலந்து பேசி அறிவிப்போம். பத்திரிகையாளர்கள் கூலாக இருங்கள். கூட்டணி தாமதம் என்பது உங்கள் கற்பனை. கட்சி தலைமை வெளியிடும் அறிவிப்பே உண்மையானது. கற்பனையான செய்திகளுக்கு பதில் கூற முடியாது.
தே.மு.தி.க., எப்படிப்பட்ட கட்சி என்பது மக்களுக்கு தெரியும்.
யார் கருத்தும் எங்களை பாதிக்காது. தமிழகத்தில், கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது. ஆனால், ஆட்சியில் பங்கு என்பதற்கு, மக்கள் தீர்ப்பு பதில் தரும். யார் எந்த தொகுதியில் போட்டி என்பது யாருக்கும் தெரியாது. கூட்டணி முடிவாக வேண்டும்; பின், தொகுதி முடிவாக வேண்டும்; அதன்பிறகே, வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.
Madame delayed Tamilnadu alliance talk since she is too busy with Trump on US election alliance
துணை தலைமை மற்றும் அறுபது சீட் கொடுக்காங்களாம்,,,,, அங்கே போலாம்
கட்சியை நடத்தத் தெரியாமல் திரிசங்கு சொர்க்கமாக இருக்கும் தேமுதிக. அதற்குக் காரணம் திருமதி பிரேமலதா அவர்களின் எல்லை கடந்த ஆசை. சரியான திட்டமிடல் இல்லாமை. நம்பிக்கையை பெற வேண்டும். அதை பெறவில்லை. இப்போது கட்சியும் இவர்களுடைய குடும்பம் இருக்கும் நிலையில் பிஜேபியோடு சேருவது சாலச் சிறந்தது. அமித்ஷா கூப்பிட்டவுடன் சென்று சேர்ந்து இருக்க வேண்டும். அல்லது திமுக கூட்டணியில் சேருவது. திமுகவுடன் சேர்ந்தால் கட்சி அதோகதி கதி தான். கமலஹாசன் கட்சி காணாமல் போனது போல கரைந்து போக வேண்டியது தான். அதிமுக-பிஜேபியோடு இருந்தால் கட்சிக்கு தனி உரிமை இருக்கும், கட்சியை சிறிதாவது வளர்க்கலாம். எதுவுமில்லாமல் பதராக போய் விடக்கூடாது.
பொய் பித்தலாட்டம்
இப்போ தெரியுதா இந்த விஜயகாந்தை கெடுத்தது யாருனு ? கொஞ்சம் நேர்மயா இருந்த ஆளையும் கட்சிக்கு கட்சி பண பெட்டிகாக allayavitu இப்போது கட்சி சீமான் கட்சிகு எல்லாம் கீழ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரி கட்சிக்கு யார் கேக்குற சீட் கொடுப்பா.
"பேச்சுவார்த்தை " - தவறான சொல். "பேரம்" என்பதே இந்த கட்சிக்கு பொருந்தும்
அப்ப கூட பீசப்பி ய யாரும் மதிக்கவே மாட்டேன்கிறார்களே
விஜயகாந்தை அழித்தவரும் இவரே. இன்று அவர் துவங்கிய கட்சியையும் பணத்துக்காக அழித்துக்கொண்டிருக்கிறார். பணப்பேய் இவர்.
பிஜேபி, திமுக, விஜய் என்று மூன்று அணிகளிடம் பேசிவருகிறார். இரண்டிடம் மட்டுமில்லை.
பொதுவா ஆண்டவனுடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணின்னு அறிவிச்சுடலாமே . அவனவன் குழம்பட்டும்.
ADMK ஊழலில் மாட்டி உள்ளதால் அவரை மிரட்டி கூட்டணி இந்த அம்மா ஊழல் இல்லை ஆகவே மிரட்டி பணியவைக்க முடியவியலை
இவர் ஊழல் இல்லாதவராக இருப்படதால் திமுகவுடன்தான் கூட்டணிமேலும்
-
கணவர் வீட்டு முன் மனைவி தர்ணா
-
டி.ஜி.பி., நியமன விவகாரம்: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு
-
நாடு திரும்ப முடியுமா; முடியாதா? விஜய் மல்லையாவுக்கு கெடு
-
பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள்: இன்று தேர்வு செய்கிறார் அமித் ஷா
-
மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறிவிடாதீர்கள் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
-
கர்நாடக பக்தர் ஆட்டோவில் தவற விட்ட ரூ.2 லட்சம் ஒப்படைப்பு