குழந்தை திருமணம் நடத்திய பெற்றோர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
பெங்களூரு: 'குழந்தை திருமணம் தொடர்பான குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பெற்றோர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதற்காக, அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது' என கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் கிராமப்புற போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட 16 வயது சிறுமிக்கு, 2023ல் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதையறிந்த கவுரிபிதனுார் கிராமப்புற போலீசார், சிறுமியின் பெற்றோர், மணமகனின் பெற்றோர், மணமகன் ஆகியோர் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்தனர்.
தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, ஐந்து பேரும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி நாகபிரசன்னா முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம்
மனுதாரர்கள் தரப்பு வக்கீல்: தி ருமணம் செய்து கொண்ட மணமகனும், சிறுமியும் காதலித்தனர். இரு வீட்டினர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது சிறுமிக்கு 16 வயது 9 மாதங்கள்.
தற்போது இவர்களுக்கு குழந்தை உள்ளது. மனுதாரர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். எனவே, அவர்கள் மீதான வழக்கை ரத்து செ ய்ய வேண்டும்.
நீதிபதி நாகபிரசன்னா: கு ழந்தை திருமணம் நடத்திய பெற்றோர் மீதான வழக்கை எந்த காரணத்துக்காகவும் ரத்து செய்ய முடியாது. அவர்கள் அனைவரும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் பெற்றோருக்கு கருணை காட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை .
இவ்வாறு கூறி, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
மேலும்
-
வங்கதேச பொதுத்தேர்தல் முதல் உலககோப்பை- இந்தியா-நமீபியா பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப் 12)!
-
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சு; கடந்த கால தாக்குதலை நினைவூட்டிய அதிபர் டிரம்ப்!
-
பூமிக்கருவில் ஒளிந்திருக்கும் உயிர் ரகசியம்
-
சூரிய பலகைகளுக்கு பாசி தரும் பாடம்
-
எழுத்தறிவுக்கு முன்பே பிறந்ததா எண் அறிவு?
-
அறிவியல் துளிகள்!