பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு

8

புதுடில்லி: லோக்சபாவில் பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.



பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. நேற்றைய விவாதத்தில், இந்த ஆண்டு பட்ஜெட் நமது நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் அளித்தார்.

பாராட்டு



''காங்கிரஸ் எம்பி ராகுல், மத்திய பட்ஜெட்டை படிக்காமல் வந்து பேசி உள்ளார். ஏழைகள், விவசாயிகள் நலனை விற்றதே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான்'' என நிர்மலா கடுமையாக சாடி பேசி பதிலடி கொடுத்து இருந்தார். இந்நிலையில் இன்று நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார்.

முக்கியத்துவம்



இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ''இந்த ஆண்டு பட்ஜெட் நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். சீர்திருத்த நடவடிக்கை கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு, திறன் மேம்பாடு, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புக்கு ஊக்கம், கல்வி உள்ளிட்ட பலவற்றிற்கு முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்'' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement