மீண்டும் பொய்யை பரப்புகிறார் ராகுல்; மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

7

புதுடில்லி: பார்லியில் மீண்டும் பொய்யை பரப்பும் காங்கிரஸ் எம்பி ராகுல், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு குறித்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது; இந்தியாவைக் காட்டிலும் வர்த்தகத்தின் மூலம் வங்கதேசம் அதிக பலன்களை அடைவதாக பார்லியில் ராகுல் மற்றொரு பொய்யைப் பரப்புகிறார். அமெரிக்காவிடம் இருந்து மூலப்பொருட்களைப் பெற்று, அதனை துணியாக உற்பத்தி செய்து, மீண்டும் ஏற்றுமதி செய்தால், அதற்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும். இந்தியாவுக்கும் அதே மாதிரியான வசதி உள்ளது. தற்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த இடைக்கால ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் போது, அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அனைவரும் அறிய முடியும். நமது விவசாயிகளுக்கும் அதிக பலன் கிடைக்கும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி அதிகரிக்கப்படும். தற்போது ரூ.5 லட்சம் கோடியாக இருக்கும் ஏற்றுமதி, ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கும். விவசாயிகள், மீனவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement