பட்டா மாறுதலுக்கு ரூ.5,500 லஞ்சம்; விஏஓ கைது
மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மதிப்பனூர் விஏஓ காசிராஜன் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவை சேர்ந்தவர் முத்துபிரியா. இவர் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 செண்ட் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரத்தின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் உட்பிரிவு பட்டாவை 30 நாட்களுக்குள் பட்டா மாறுதல் செய்து தர வேண்டும். ஆனால் பட்டா மாறாமல் இருந்துள்ளது. இதனால் உட்பிரிவு செய்து பட்டா வழங்குமாறு மதிப்பனூர் வி.ஏ.ஓ காசிராஜனை அனுகினார்.
காசிராஜன் பட்டா மாறுதலுக்கு ரூ.6 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து முத்துபிரியா மதுரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார். அவர்களின் அறிவுரையின்படி ரூ.5,500 ரசாயனம் தடவிய பணத்தை விஏஓ அலுவலகத்தில் இருந்த காசி ராஜனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
@block_Y@
லஞ்சப் பேர் வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். இப்பகுதிக்கு தகவல் தெரிவிக்கும் வாசகர் பெயர், பிற விவரங்கள் வெளியாகாது. ரகசியம் காக்கப்படும். 'எனது பெயரை வெளியிடலாம்' என, துணிச்சலாகச் சொல்லும் வாசகரின் விவரம் மட்டும் வெளியாகும். மறக்காமல் அதையும் கடிதத்திலேயே குறிப்பிடுங்கள். e-mail:cbereaders@dinamalar.In, 95666 97267 என்ற நம்பரில் வாட்ஸ்அப், அரட்டை செயலிகள் வழியாக வாசகர்கள் தகவல் அனுப்பலாம். தபாலில் அனுப்ப... 'லஞ்சம் என்னிடம் பறித்தனர் பகுதி', 'தினமலர், டி.வி.ஆர்.ஹவுஸ், சுந்தராபுரம், கோவை.block_Y
தமிழகத்தில் எந்த அதிகாரியும் லட்சம், கோடிகளில் லஞ்சம் வாங்குவதில்லையா? ஆச்சர்யமாக இருக்கிறதே சிறிய சிறிய மீன்கள்தான் பிடிபடுகின்றன. பெரிய பெரிய சுறாமீன்கள் எப்பொழுது பிடிபடும்?மேலும்
-
பார்லியில் உண்மையை பேசினேன்... பின்வாங்க மாட்டேன் என்கிறார் ராகுல்
-
வங்கதேச தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: ஷேக் ஹசீனா
-
தேர்தல் கண்காணிப்பு;வங்கதேசத்தின் அழைப்பை ஏற்க மறுத்தது இந்தியா!
-
கேரளாவிலும் கொள்ளையடிக்க தொடங்கி இருக்கும் திமுக; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 31 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்; சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
-
வரலாறு படைத்தார் இஷான் கிஷான்; 210 ரன்னை இலக்காக நிர்ணயித்தது இந்தியா