தமிழகத்திற்கு புது டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு
புதுடில்லி: தமிழகத்தின் அடுத்த டிஜிபி நியமனத்துக்கான பெயர் பட்டியலை யுபிஎஸ்சிக்கு ஒரு வாரத்தில் அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக டிஜிபி ஆக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வை தொடர்ந்து பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கிஷோர் கிருஷ்ணசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 'பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அரசின் தவறு. புது டிஜிபி நியமனம் செய்ய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை தமிழக அரசுக்கு கடைபிடிக்கவில்லை' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசு சார்பில், 'டிஜிபி பதவிக்கு சிலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
யுபிஎஸ்சியில் சில குழப்பம் நிலவுகிறது. டிஜிபி இல்லாததால், தேர்வுக்குழுவில் கூடுதல் உள்துறை செயலாளரை இணைக்க வேண்டும் என கோரியிருந்தோம். இதற்கு யுபிஎஸ்சி ஏற்கவில்லை. டிஜிபி தேர்வு செய்பவர், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என நிபந்தனை சேர்க்கப்பட்டு உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்,' தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமை செயலாளர். மற்றொருவர், டிஜிபி இல்லாதபட்சத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர் குழுவில் இடம் பெற வேண்டும். டிஜிபி தேர்வு செய்யப்படுபவர், சட்டம் ஒழுங்கு, உள்துறை உள்ளிட்ட குறிப்பிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்ற விதியை தமிழகத்துக்கு தளர்த்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கான பெயர்களை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயரை பரிசீலனை செய்து 2 வாரங்களுக்குள் யுபிஎஸ்சி தேர்வு செய்து புதிய டிஜிபி பெயரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (12)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
12 பிப்,2026 - 21:38 Report Abuse
எல்லாவற்றிற்கும் மத்திய அரசை குறைகூறும் இந்த திராவிட மாடல் அரசு ஏன் இன்னும் ஒரு நிரந்தர டி.ஜி.பி.யை தேர்தெடுக்கவில்லை பொறுப்பு டி.ஜி.பி. என்ற ஒரு புதிய பதவியை இவர்களே உண்டாக்கி அதில் வேக எவ்வளவு ஆசை இல்லாத ஒன்றை இவர்களே உண்டாக்கி நாட்டில் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது யார் எந்த ஆட்சி இனியாவது காலம் தாழ்த்தாமல் ஐந்து பெயர்களை மத்திய அரசுக்கு அனுப்பி ஒரு நிரந்தர டி.ஜி.பி.யை பெறுவதற்கு வழி வகுங்கள் காலம் தாழ்த்த வேண்டாம் 0
0
Reply
Chandru - ,இந்தியா
12 பிப்,2026 - 21:24 Report Abuse
. தமிழ்நாடு அரசு தங்களை சிறிது கூட மதிப்பதில்லை என்று இவை நன்கு அறியும் 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
12 பிப்,2026 - 20:47 Report Abuse
கோர்ட் க்கு திருட்டு தீயமுகவின் கஷ்டம் புரிய மாட்டேங்குது. 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
12 பிப்,2026 - 19:44 Report Abuse
நாங்க எந்த விதியையும் மதிக்க மாட்டோம் என்பது தான் இப்போதைய த நா அரசின் அடாவடித்தனம்! 0
0
Reply
Sun - ,
12 பிப்,2026 - 19:33 Report Abuse
தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்! 0
0
Reply
ManiK - ,
12 பிப்,2026 - 19:23 Report Abuse
எதுக்குமே லாயக்கில்லாத மாநில அரசு இருந்தால் என்ன எல்லாம் பிரச்சனை வரும் என்று 5 ஆண்டுகளாக பாடம் எடுத்துவிட்டார் ஸ்டாலின். நல்லாசிரியர் விருது குடுக்கலாம். 0
0
Reply
GMM - KA,இந்தியா
12 பிப்,2026 - 19:07 Report Abuse
மத்திய அரசு, தமிழக அரசு. ஒரு உறையில் இரு கத்தி? டிஜிபி ஓய்வுக்கு முன் புதியவர் ஏன் தேர்வு செய்ய முடியவில்லை. டிஜிபி இல்லை என்றால், அண்டை மாநில டிஜிபி. அல்லது இணை டிஜிபி. உள்துறை செயலர்/அமைச்சர் இணைக்க சட்ட விதி என்ன? அரசு பலசரக்கு கடை கிடையாது. 4 பிரிவில் 10 ஆண்டு. தகுதியான போலீஸ் கிடைக்க வில்லை என்றால் மாற்று விதியில் இருக்க வேண்டும். நிபந்தனை சட்ட படி செல்லுமா,? ஊழலை வளர்க்க ஏராளமான குளறுபடிகள். நிர்வாக மாநிலங்கள் அரசாவது அரசியல் சட்ட படியா, வழக்கறிஞர் வாத படியா? 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
12 பிப்,2026 - 18:32 Report Abuse
ஸ்டாலின் அரசுக்கு சிபிஐ IT ED ECI இப்போ UPSC தொந்தரவு அனைத்தையும் துடைத்து எறிவார் ஸ்டாளின் 0
0
duruvasar - indraprastham,இந்தியா
12 பிப்,2026 - 19:51Report Abuse
TNPC இந்தப்எ லிஸ்டில் வராதோ. அது போக நமக்கு சாதகமாக வராத உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் இன்னும் விடுப்போன ஈய பித்தளை சாமான்கள் எல்லாவற்றையும் சேருங்கள் ஐயா. 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
12 பிப்,2026 - 18:31 Report Abuse
UPSC வெச்சி அரசு மிரட்டுகிறது இதை கேட்க யாரும் இல்லை 0
0
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
12 பிப்,2026 - 18:45Report Abuse
எல்லாமே... எல்லா இடத்திலுமே அல்லக்கை, நொள்ளக்கை மயமாகிவிட்டதே...? 0
0
guna - ,
12 பிப்,2026 - 21:16Report Abuse
இருநூறு பொங்குற அங்குறேங்க 0
0
Reply
மேலும்
-
பார்லியில் உண்மையை பேசினேன்... பின்வாங்க மாட்டேன் என்கிறார் ராகுல்
-
வங்கதேச தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: ஷேக் ஹசீனா
-
தேர்தல் கண்காணிப்பு;வங்கதேசத்தின் அழைப்பை ஏற்க மறுத்தது இந்தியா!
-
கேரளாவிலும் கொள்ளையடிக்க தொடங்கி இருக்கும் திமுக; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 31 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்; சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
-
வரலாறு படைத்தார் இஷான் கிஷான்; 210 ரன்னை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
Advertisement
Advertisement