விஜயபுரி ஸ்ரீஜெய யோக க்ருஷ்ணர் கோவிலில் முதல் முறையாக இன்று சிவராத்திரி வழிபாடு
சிவராத்திரி அன்று வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து சிவ வழிபாடு மேற்கொள்ள ஒரு சிறந்த இடம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் அருகில் பெரியவீரசங்கிலி நந்தவன தோட்-டத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவனும், சக்தியும், வில்வம்--வேம்புவாக ஒன்றோடு ஒன்றிணைந்து சிவசக்தியாக காட்சி அளிக்-கிறார்கள்.
விஜயபுரி ஸ்ரீஜெய யோக க்ருஷ்ணர் ஆலய வளாகத்தில் உள்ள, சிவன் சன்னதியில் சிறப்பு சிவராத்திரி வழிபாடு, இந்த ஆண்டு முதல் முறையாக இன்று நடக்கிறது.சிவராத்திரி என்பது இரவு முழுவதும் சிவபெருமானை மனதில் நினைத்து மனமுருகி வழிபடும் இரவு. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மரங்கள் தல விருட்சமாக இருப்பது போல்
சிவபெருமானின் ஆற்றலை அதிக அளவில்
உள்ளடக்கி உள்ள மரம் வில்வமரம். ஆகவே,
தான் வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடுவது பண்டைய காலம் முதல்
நடைமுறையில் இருந்து வருகிறது.
சிவனும் வில்வமரமும் பிரிக்க முடியாத தெய்வீக தொடர்பு கொண்டவை. இங்குள்ள கோயில் வளாகத்தில் சிவனுக்குரிய வில்வ மரமும் சக்திக்குரிய வேப்ப மரமும் ஒன்றொடு ஒன்று பின்னி பினைந்து சுயம்புவாக தோன்றி வளர்ந்து உள்ளது. இங்கு ஸ்தல விருட்சம் சிவ சக்தியாக அருள்
பாலித்து வருவது சிறப்பாகவும். உலகில் சிவனின் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளை, இங்கு ஒரு வில்வமும், இரண்டு வேம்புகளும் முக்கோண வடிவில் சுயமாக தோன்றி சக்திகளை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த சிவ-சக்தி சொரூபமான சிவ சக்திகளை சிவராத்திரியில் வணங்குவது சிறப்பாகும். சிவன் வாசம் செய்யும் இடமாக வில்வ மரமும், மகாலட்சுமி வாசம் செய்யவும் இடமாக வேப்ப மரமும் ஒன்றாக இருப்பதுடன், இதனை சுற்றி ஐந்து பஞ்ச லிங்கங்களும், ஒரு நாக லிங்கமும் அமைந்துள்ளது.
பக்தர்களின் ஆயுளை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த சிவபெருமான், இங்கு அபிராமி சமேத ஆயுள் அமிர்தகடேஸ்வரராக காட்சி தரு-கிறார். மூலஸ்தானத்தில் ரிஷப வாகனத்தில் அமர்ந்த கோளத்தில் பார்வதியும் பரமேஸ்வரரும் காட்சி தருகிறார்கள். குடும்ப ஒற்றுமை மற்றும் சிவபெருமானின் சகல பலன்களையும் பக்தர்கள் பெற, இந்த ஆலயம் ஒரு வர பிரசாதமாக அமைந்துள்-ளது. உலகில் வேறு எங்கும், இதுவரை காணாத வகையில் வில்-வமும் வேம்பும் சிவசக்தியாக சுயம்புவாக தோன்றி வளர்ந்துள்-ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் காஞ்சிகாமகோடி பீடாதிபதி தவத்திரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவா-மிகள், இந்த கோயிலுக்கு வருகை புரிந்து, சக்கர பூஜைகளில் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளார்.
இந்த ஆலயத்தில் வருகிற 15.02.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை முதல் கால பூஜையில் சிவாச்சாரியர்களால் பிரம்ம தேவருக்கு அபிசேகம் நைவேத்திய பூஜைகளும், இரவு 9.00 மணி முதல் 12.00 மணி வரை இரண்டாம் கால பூஜையில் சிவாச்சாரியர்களால் மகாவிஷ்னு-வுக்கு அபிசேகம் நைவேத்திய பூஜைகளும், இரவு 12.00 மணி முதல் 3.00 மணி வரை மூன்றாம் கால பூஜையில் சிவாச்சாரியர்-களால் அம்பாள் வழிபட்ட காலமான லிங்கோத்பவ காலத்தில் அபிசேகம் நைவேத்திய பூஜைகளும் மற்றும் அதிகாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை நான்காம் கால பூஜையில் சிவாச்-சாரியர்களால் தேவர்கள், ரிஷிகள் வழிபட்ட காலத்தில் சிறப்பு அபிசேகம் நைவேத்திய பூஜைகளும் நடைபெற உள்ளது. சிவசக்-தியாக காட்சியளிக்கும் தல
விருட்சம் முன்பு, இந்த பூஜைகள் நடைபெற உள்ளது, வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
சிவ பூஜைகள். அனைத்தும் புகழ்பெற்ற தேவ பிரசன்ன சோதிடர் காக்காபாளையம் தனபால் அவர்களின் முன்னிலையில் நடக்கி-றது. சிவராத்திரியன்று அனைத்து சிவ பக்தர்களும், இந்த ஆலயம் வந்து வணங்கி சிவனருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இத்தகவலை விஜயபுரி ஸ்ரீஜெய யோக க்ருஷ்ணர் ஆலய திருப்பணி சேவா அறக்கட்டளை தெரிவித்துள்-ளது.
மேலும்
-
திமுக எம்பி டிஆர்பாலு மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர்வேன்: அண்ணாமலை அறிவிப்பு
-
நீதிபதி மீது அரிவாள் வீச்சு... நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
நடிகை திரிஷா குறித்த பேச்சு: நயினார் நாகேந்திரன் வருத்தம்
-
தமிழக பொருளாதாரத்தில் வேளாண்துறையின் பங்களிப்பு குறைவு; ஜெயரஞ்சன்
-
வங்கக் கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் பிப்ரவரி 21,22ல் மழைக்கு வாய்ப்பு
-
நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்; அமித்ஷா இறுதி கெடு