தமிழக பொருளாதாரத்தில் வேளாண்துறையின் பங்களிப்பு குறைவு; ஜெயரஞ்சன்
சென்னை: தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பொருளாதாரத்தில் வேளாண் துறையின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருவதாக தமிழக மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது; 2025-26 ஆண்டுக்கான தமிழக பொருளாதார ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை என்பது ரீபிளேஷ்மென்ட் அளவுக்கு கீழே சென்றுள்ளது. இதனால், தமிழகத்தில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாகவும் ஆகிக் கொண்டே வரும்.
உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் இரண்டு பங்காக இருக்கிறது. இதன் விளைவாக, மக்கள் தொகை பெருக்கம் குறைந்தது. குழந்தைகள் கல்வி கற்க செல்வதால், சந்தைகளில் வேலை செய்யும் ஆட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது.
சுயதொழில் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம், கேரளாவில் தான் தினக்கூலி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதுதான் பிற மாநிலங்களுக்கும், தமிழகத்திற்கும் உள்ள வேறுபாடு. தொழில்துறை வேகமாக வளரும் போது, பொருளாதாரத்தில் வேளாண் துறையின் பங்களிப்பு குறைந்து கொண்டே செல்லும். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பொருளாதாரத்தில் வேளாண் துறையின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
தமிழகத்தில் 25 சதவீத மக்களே விவசாயம் தொடர்புடைய பணிகளை செய்கின்றனர். 75 சதவீதம் மக்கள் வேளாண்துறை அல்லாத பணிகளை செய்து வருகின்றனர். இது ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே செல்லும். வளர்ந்த நாடுகளில் 4 அல்லது 3 சதவீதம் பேர் தான் வேளாண் துறையில் இருப்பார்கள். தமிழகத்தில் ஒரு காலத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்த நிலையில், 25 சதவீத மக்களே தற்போது வேளாண் தொழிலில் இருக்கின்றனர். மேலும், பிற துறைகளின் வளர்ச்சியால், வேளாண் துறையின் பங்களிப்பும் குறைந்து கொண்டே செல்கிறது.
பிற மாநிலங்களை எடுத்துக் கொண்டால், மக்கள் அதே துறையில் தான் இருப்பார்கள். ஆனால், அதன் பங்களிப்பு குறையும். இதன் காரணமாக வறுமை ஏற்படும். ஆனால், நிறைய பேர் வேறு தொழில்களுக்கு நகர்ந்து செல்கின்றனர்.
கடந்த நிதியாண்டில் தமிழகம் வளர்ச்சி 11.3ஆக அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக நாடுகள் 3 சதவீதமும், இந்தியா 7 சதவீதம் வளர்ச்சியடைந்த நிலையில், தமிழகம் 11.3 சதவீதமாக வளர்ந்துள்ளது. இதற்கு உற்பத்தி மற்றும் தொழில்துறை தான் முக்கிய பங்காற்றியுள்ளது. உற்பத்தித்துறை 14 சதவீதம் பங்களித்துள்ளது. உலகம் முழுவதும் தோல் அல்லாத காலணிக்கு ஒரு தேவை உள்ளது, தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது
தொழில்துறை மிக வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. நான்கைந்து ஆண்டுகளில் பிரமாண்டமாக வளர்ச்சி. முன்பு உதிரிபாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும். அதனை ஒருங்கிணைக்கும் பணிகளை மட்டுமே செய்து வந்தோம். தற்போது, உதிரிபாகங்கள் இங்கேயே உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டதால், அதன் மதிப்புக்கூட்டு தன்மை அதிகரிக்கிறது. உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீண்ட கடற்கரை இருக்கும் போதும், கப்பல் கட்டும் தொழில் வளரவே இல்லை. தற்போது, அதற்கான பெருமுயற்சி எடுக்கும் போது, தமிழகம் மற்றும் குஜராத்தை தேர்வு செய்கின்றனர். கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க தென்கொரிய நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தத் தொழிலின் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்பு உருவாகும். இதற்கு மத்திய அரசு ஊக்கம் கொடுத்துள்ளது.
வேளாண்துறையைப் பொறுத்தவரையில் காலநிலை மாற்றம் பெரும் சவாலாக இருக்கிறது. வேளாண் துறையில் உற்பத்தி திறன் அதிகரித்திருந்தாலும், அதன் வளர்ச்சி தேக்க நிலையை அடைந்துள்ளது. பிற மாநிலங்களைக் காட்டிலும் சமூகத்துறைக்கு தமிழகம் அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளது. சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கைகொடுக்காத நிலையில், நிலக்கரி மின் உற்பத்தியையே அதிகளவில் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே, பகலில் சோலார் மூலம் உருவாகும் மின்சாரத்தை பேட்டரி மூலம் சேமித்து, மாலையில் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அறுகளிலிருந்து மனலை எடுத்ததால் பல இடங்களில் ஆறுகளின் மட்டம் விவசாய நிலத்தின் மட்டத்தினை விட மிகவும் கீழே சென்றுவிட்டது இதனால் பல இடங்களில் விவசாயம் பாதித்துவிட்டது. பல நிலச்சுவான்தார்கள் வேளாண்மையை பகுதி நேர தொழிலாக செய்கிறாரகள்.
வீடு வாடகைக்கு விடுவது போல் நிலமும் குறுகிய கால வாடகைக்கு கிடைப்பது போல் வீட்டு வாடகை சட்டங்கள் போல நில வாடகை சட்டங்கள் இருந்தால் பல விவசாயம் செய்யாத நிலங்களில் சிறு விவசாயிகள் தோட்டங்கலையில் ஈடுபடுபவர்கள் விவசாயம் செய்யலாம்.
சொல்லிட்டாருப்பா பொருளாதார புளி
நான்கரை ஆண்டுகள் நீங்க தமிழ்நாட்டுப் பொருளாதாரம் பத்திப் பேசினீர்களா? இல்லையே இப்போ ஏன் அதை பற்றி
ஊருக்கு ஊருக்கு பொருளாதார அறிவாளிகள்
1 விவசாய பொருட்களை பாதுகாக்க கிடங்குகள் இல்லை. தெருவில் கூட்டி வைத்து மழையில் நனையும் அநியாயம். லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
2 விவசாய பொருட்களுக்கு சரியான விலை இல்லை. காய்கறிகள் போன்றவை உற்பத்தி செலவை விட, விற்பனை விலை குறைவு. இடைத்தரகர் பார்க்கும் லாபம் விவசாயிகளுக்கு இல்லை. இந்த இரண்டையும் விவசாயி செய்ய வேண்டும்.
3 மதிப்பு கூட்டுதல் பற்றி விவசாயிகளுக்கு அறிவு இன்னும் போய் சேரவில்லை. உதாரணத்திற்கு மிளகாயின் விலை ஒரு குவிண்டால் 14000 கிலோவின் விலை 140 ஆனால் மிளகாய் பொடி விலை 30000
4 உணவு பதப்படுத்தும் தொழில்கள் - கொய்யா, சப்போட்டா, மாம்பழம், வாழைப்பழம், அது போல பல பொருட்கள் கூட்டுறவு முறையில் தொழில்கள் ஆரம்பிக்கலாம். அது இங்கே இல்லை.
5 விவசாய கூலி தலைக்கு மேலே. போட்ட பணத்தை எடுத்தால் போதும் என்ற நிலையில் விவசாயி இருக்கிறான்.
நைநாவுக்கு பொருளாதாரம் சொல்லிக் கொடுத்ததே நம்ம மயில்சாமி தான
இவர் அறிவாலய ஊது குழல் போல இருக்கு
வேளாண்துறை பங்களிப்பு குறைவு .அது சரி இதனால் உங்களுக்கு என்ன நஷ்டம். நீங்களா போய் நாத்து நட போறீங்க . உங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம். உங்க 5 வருட சேவை இன்னும் 500 வருடங்களுக்கு நிற்கும். அது போக நீங்க தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்திலதானே இருக்கீங்க ?
இந்தாளு அறிவாலய ஆள். தமிழக கடனுக்கும் பொதுமக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லியவர். இவரு திமுக கொள்கை பரப்பு
எதையாவது உளரு. யார் இதையெல்லாம் சரிபார்க்க போறாக..
₹200 குவார்ட்டர் அடிமை. இப்படி தான் பில்டப் கொடுத்து தன் பாக்கெட்டை நிரப்பும்
அய்யா பொருளாதார மேதை அவர்களே, வேளாண் பங்களிப்பு இல்லை என்றால், உணவுக்கு திண்டாட்டம் தான். காவேரி, தாமிரபரணி, போன்ற நதிகள் இருந்தும், வேளாண் தொழில் நசுங்கிறது. வெட்கி தலை குனிய வேண்டும்.
தமிழக பொருளாதாரத்தில் எந்த துறையின் பங்களிப்பு சொல்லும்படியா இருக்குங்க??மேலும்
-
பேரார் சாலையில் கூட்டமாக உலா வரும் காட்டெருமைகள்: 'செல்பி' மோகத்தில் சுற்றுலா பயணியர் தொல்லை
-
மனுதாரர்கள் தீக்குளிக்க முயற்சி வாரந்தோறும் போலீசார் 'அலர்ட்'
-
நேரு கம்பையை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் கலெக்டர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு
-
ஊராட்சி துவக்க பள்ளியின் 55வது ஆண்டு விழா
-
நடப்பாண்டு கோடை விழாவுக்கு 10 லட்சம் மலர் செடிகள் பூங்காவில் நடவு பணி துவக்கம்
-
மலை கோவில்களில் சிவன் ராத்திரி விழா கோலாகலம்