நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்; அமித்ஷா இறுதி கெடு
புதுடில்லி: நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டம் அதன் கடைசி கட்டத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் நக்சல் அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார்.
டில்லி காவல்துறையின் 79வது நிறுவன தின விழாவில் அமித்ஷா பேசியதாவது: வரும் இரண்டு ஆண்டுகளில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்படும்.
போலீஸ் ஸ்டேஷனில் எப்ஐ ஆர் பதிவு செய்த பிறகு, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரை 3 ஆண்டுகளுக்குள் அளிக்கப்படும். இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும். குற்றவியல் வழக்குகளில் தண்டனை விகிதம் 80 சதவீதமாக உயரும்.
கடந்த 11 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள மைல்கற்களில் ஒன்றாகும். டில்லி போலீசார் எப்போதும் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது கடமைகளை செய்து வருகின்றனர். 2014ம் ஆண்டுக்கு முன்பு, கடந்த நான்கு தசாப்தங்களாக நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு சவாலாக 4 பிரச்னைகள் இருந்தது.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து, வடகிழக்கு மற்றும் நக்சலிசம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வன்முறை வழக்குகள் 80%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளன. நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டம் அதன் கடைசி கட்டத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் நக்சல் அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிவுக்கு வரும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
வேட்டைக்கு புறப்பட்டுவிட்டார்.
யானைபடை குதிரைப்படை சகிதமாக ஐயா எலி வேட்டைக்கு புறப்பட்டு விட்டார்.
வடநாடு இருநூறு வாங்க குடும்பதுடன் புறப்பட்டு விட்டார்...வாங்கிவிட்டு நேராக டாஸ்மாக் சென்றுவிடுவார்
தமிழகம் கேரளம் போன்ற மாநிலங்களில் உள்ள அர்ப்பன் நக்சல்களை ஒழிக்க வேண்டும்
அமித்ஷா நக்சல்களை வேட்டையாட கிளம்பிவிட்டார்.
வேஷம் பொருத்தமாக இல்லைமேலும்
-
பேரார் சாலையில் கூட்டமாக உலா வரும் காட்டெருமைகள்: 'செல்பி' மோகத்தில் சுற்றுலா பயணியர் தொல்லை
-
மனுதாரர்கள் தீக்குளிக்க முயற்சி வாரந்தோறும் போலீசார் 'அலர்ட்'
-
நேரு கம்பையை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் கலெக்டர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு
-
ஊராட்சி துவக்க பள்ளியின் 55வது ஆண்டு விழா
-
நடப்பாண்டு கோடை விழாவுக்கு 10 லட்சம் மலர் செடிகள் பூங்காவில் நடவு பணி துவக்கம்
-
மலை கோவில்களில் சிவன் ராத்திரி விழா கோலாகலம்