வாழ்க்கையில் வெற்றிக்கு இவை மிகவும் அவசியம்; சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அட்வைஸ்
சண்டிகர்: ''வாழ்க்கையில் வெற்றிக்கு கடின உழைப்பு, தெளிவான இலக்கு, ஒழுக்கம் ஆகிய மிகவும் அவசியம்'' என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சூர்ய காந்த் பேசியதாவது: வாழ்க்கையில் வெற்றிக்கு கடின உழைப்பு, தெளிவான இலக்கு, ஒழுக்கம் ஆகிய மிகவும் அவசியம். அதேபோல், நேர்மை, சமூகம் மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை மிக முக்கியமானவை.
மாணவர்கள் ஒழுக்கம், நீதித்துறை மற்றும் அரசியலைப்பு சட்டம் குறித்து நன்கு தெரிந்து விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு சூர்யகாந்த் பேசினார். அவர் பல்கலைக்கழகம் வளாகத்தில் ஒரு மரக்கன்றையும் நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை எடுத்துரைத்தார்.
அவர் பல்கலை வளாகத்தின் பசுமையான மற்றும் சுத்தமான சூழலைப் பாராட்டினார்.
கல்லூரிகளில், உயர் மேற்படிப்பு, மருத்துவ கல்வி கூடங்களில் போதை மருந்து விற்பனை அதிகரிக்கிறது. ஒழுக்கம் சார்ந்த கல்வி இல்லை. பல இடங்களில் பெற்றோர்களே ஆசிரியர்களே தவறான உதாரணங்கள்.
சந்தோஷம் இவைகளுடன் நல்ல உணவும் அவசியம் உணவு பற்றி பெரியவர்கள் கவனம் செய்யாததால் தான் உலகில் சண்டை வன்முறை அனைத்தும் நிலவுகிறதுமேலும்
-
தமிழக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
-
தகவல் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
-
விடைபெற்றார் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்!
-
இபிஎஸ்சை வீட்டில் சென்று சந்தித்த மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன்!
-
அடுத்த தலைமுறை விமான இன்ஜின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்; ராஜ்நாத் சிங்
-
அதிமுக சின்னம் குறித்த வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி