திரும்ப, திரும்ப பொய்களை பரப்புகிறீர்களே ராகுல்; அமெரிக்க ஒப்பந்த விவகாரத்தில் அமித் ஷா பதிலடி
காந்தி நகர்: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் திரும்ப, திரும்ப பொய்களை பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
குஜராத்தின் காந்தி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் அமித் ஷா பேசியதாவது;
ராகுல் நீங்கள் பொய்களைப் பரப்புகிறீர்கள். இந்த வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்வதன் மூலம் பிரதமர் மோடி நமது பால் துறையை அழித்துவிட்டதாக ராகுல் கூறினார்.
பால் உற்பத்திக்கு வழி வகுப்பவர்கள் தான் நாங்கள். அனைத்து வர்த்த ஒப்பந்தங்களிலும் பால்துறைக்கு முழு பாதுகாப்பு தரும் பணியை பிரதமர் மோடி செய்துள்ளார். அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மூலம், நமது விவசாயிகளின் விளைபொருட்கள், மீனவர்களின் பொருட்கள் உலகம் முழுவதும் உள்ள சந்தைகளில் சென்று சேருவதற்கான வழி திறக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள், கால்நடைகளை வளர்ப்போரின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது என்ற பிரதமரின் உறுதியை இங்கே உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்வதன் மூலம் பிரதமர் மோடி நமது பால் துறையை அழித்து விட்டதாக ராகுல், நீங்கள் பொய்களை பரப்புகிறீர்கள். அவர் கூறுவது சாத்தியமற்றது.
உங்களுக்கு (ராகுல்) விடை கொடுத்த இந்திய மக்களை கடவுள் ஏற்கனவே ஆசிர்வதித்துவிட்டார். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். இந்த உலகிற்கு,. நம் நாட்டின் முழு விவசாய சந்தையையும் நீங்கள் திறந்துவிட்டீர்கள். பிரதமர் மோடி வந்தார், அத்தகைய சூழலை மாற்ற உறுதியுடன் செயல்பட்டார். ஒப்பந்தத்தை மாற்றினார். இன்றும் கூட விவசாயிகளை பாதுகாக்க அவர்(பிரதமர் மோடி) ஒரு கவசம் போன்று செயல்படுகிறார்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
ராகுல உடுங்க. அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து ஆயில் வாங்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு என்ன பதில். என்ன கையெழுத்து போட்டீங்க? ஆயில் வாங்குவீங்களா மாட்டீங்களா?
ஏல..தெரிஞ்சு நீ என்ன பண்ண போறா..உனக்கு இருநூறு போதுமே...
எனக்கு ஒன்று புரியவில்லை.....ராகுல் எந்த குற்றச்சாட்டை வைத்தாலும்.... அதை ஆதாரங்களுடன் சொல்வதில்லை..... ....
அவருடைய நோக்கம் குற்றச்சாட்டை நிரூபிப்பது அல்ல ...... காங்கிரஸ் அடிமைகளின் நம்பிக்கையைத் தக்க வைக்க ...
ராகுல் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். காங்கிரஸ் எக்ஸ்பைரி ஆகிவிட்டது. 2014 தேர்தலில் வாங்கிய அடியில் குற்றுயிரும் குலையுயிருமாக அது ஐ.சி.யு விற்கு போய்விட்டது. அப்படியே இருக்காமல் 2019 தேர்தலில் இறங்கி வாங்கிய அடியில் மார்ச்சுவரிக்கு போய்விட்டது. செத்ததை வெளியே சொல்லாமல் 2024 தேர்தலில் இறங்கப்போய் இது பொணம்டான்னு உலகத்துக்கு தெரிஞ்சி போச்சி. 2029 லதான் கருமாதி சோறு போடுவேன்னு அடம் புடிக்காதிங்க அதுவரை பொணத்த வச்சி பொழப்பு நடத்தலாம்ன்னு முடியுமா. ஆவுற வேலைய பாருங்க. எதிரே இருப்பதை பாருங்க ஒவ்வொண்ணும் கெத்து காட்டுதுங்க. நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், ஜெயசங்கர், நிதின் கட்காரி, அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திரா பிரதான், ஜோதிராதித்ய சின்ஹா, கிரண் ரிஜ்ஜு சிவ்ராஜ்சிங் செளகான். பிரகலாத ஜோஷி, ஜெ.பி.நட்டா என்று வலிமையான திறமையான நேர்மையா கொம்பன்கள். அப்படி ஒங்க கம்பெனில ஒருத்தர காட்டமுடியுமா. 2004-2014 நீங்க போட்ட ஆட்டம் கொஞ்சநஜ்மா. நோட்டடிக்குற மெஷினை பாகிஸ்தானுக்கு வித்தவிங்கதானப்பா நீங்க. கான்க்ராஸ் தேஞ்சி கட்டெறுமாயிடிச்சி, இனி காட்டெருமை கிட்ட போயி மொதலாம்னு கனவு காணாதீங்க. சிக்கி சின்னாபின்னமா போயிடாதீங்க.
துரோக நடவடிக்கையில் ஈடுபடும் ராகுல் உள்ளிட்ட எந்த ஒரு இந்தியக்குடிமகன் மீதும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்துக்கு பொறுப்புள்ளது .... ஏன் அதிகாரமும் உள்ளது .... உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம் ????
உங்களால் தண்டிக்க முடியாதா சட்டப்படி ஏன் தயக்கம்.
ராகுல் ஒரு பொன்முட்டையிடும் வாத்து .... அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விளையாட்டு முடிந்து போகும் .... காங்கிரஸ் தேச விரோதக்கட்சி என்கிற உண்மையை மக்களிடம் வைத்து தொடர்ந்து வாக்கு சேகரிக்க முடியாது .... அதுதான் காரணமென்று நான் நினைக்கிறேன் ....மேலும்
-
திமுக எம்பி டிஆர்பாலு மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர்வேன்: அண்ணாமலை அறிவிப்பு
-
நீதிபதி மீது அரிவாள் வீச்சு... நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
நடிகை திரிஷா குறித்த பேச்சு: நயினார் நாகேந்திரன் வருத்தம்
-
தமிழக பொருளாதாரத்தில் வேளாண்துறையின் பங்களிப்பு குறைவு; ஜெயரஞ்சன்
-
வங்கக் கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் பிப்ரவரி 21,22ல் மழைக்கு வாய்ப்பு
-
நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்; அமித்ஷா இறுதி கெடு