சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை : சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்பது உட்பட,முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 'அனைத்துலக வள்ளலார் மாநாடு - 2026' சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. மாநாட்டு திடலில், வள்ளலார் புகைப்பட கண்காட்சி மற்றும் மூலிகை கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பின், சன்மார்க்கர்களுக்கு விருதுகள் வழங்கி, அவர் பேசியதாவது: உலகிற்கு அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவர் வழியில், மக்கள்நலத் திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது. இம்மாநாட்டின் வாயிலாக சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
* அனைத்துலக வள்ளலார் மாநாடு நடந்ததை குறிக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் நினைவுத்துாண் அமைக்கப்படும்
* வடலுாரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி ஏற்படுத்தப்படும். அந்த பள்ளியில், திருவருட்பா இசைப்பயிற்சி அளிக்கப்படும்
* வடலுாரில், வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்
* ஸ்பிரிச்சுவல் அல் - கெமி என்ற வள்ளலார் புத்தகம், அறநிலையத்துறை பதிப்பகம் வழியே வெளியிடப்படும்
* வள்ளலார் பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும், மூன்று நாட்கள் விழா நடத்தப்படும்
* மேட்டுக்குப்பம், மருதுார், கருங்குழி ஆகிய இடங்களில் வள்ளலார் அன்னதான கூடங்கள் திறக்கப்படும்
* கடலுார் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கப்படும் பூங்காவுக்கு, 'வள்ளலார் பூங்கா' என பெயர் சூட்டப்படும்
* சென்னையில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலக வளாகத்தில், வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நெடுஞ்சாலை பெயர் மாற்றம்
* சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் பெயர், 'வள்ளலார் நெடுஞ்சாலை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் பெயர் பலகையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
* வடலுாரில் கட்டப்பட்டுள்ள வள்ளலார் சர்வதேச மையம் பகுதி -2 கட்டங்கள்; திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்; சித்த மருத்துவ மையம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி போன்றவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மக்களே ஏமந்து விடாதீர்கள்.
மக்களே, ஏமாந்து விடாதீர்! வள்ளலாரைப் பாராட்டுவது உங்கள் ஓட்டுக்களுக்காகவே செய்யும் தந்திரம். இவரல்லாமாவது சநாதனப் பெரியோர்களை மதிப்பதாவது? வேஷம். 5000 லஞ்சம் ஒரு ஓட்டுக்கு, இப்போது வள்ளலார்!
வள்ளலார் காலத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது. சிரிப்பு சர்வாதிகாரி சுடாலின் ஆட்சியில் சந்தி சிரிக்கிறது.
சாலைகளுக்கு என்ன பெயர் இருந்தாலென்ன..? குண்டும் குழியும் இல்லாமலிருந்தால் போதும்.
இது தேர்தல் சர்க்கஸ் . இன்னும் என்னென்ன இருக்கோ தெரியல. வள்ளலார் பற்றி இவர்கள் பேச என்ன தகுதி இருக்கிறது? சாராயம் , புலால் , போதை , கொலை ,கொள்ளை , இவைகளை ஆதரிக்கும் இந்த கட்சி வெறும் விளம்பரத்துக்காக இதை செய்கிறது. இந்த தேர்தலில் இவர்கள் ஜெயித்தால்தானே ? பார்க்கலாம் .
தமிழகத்தில் ஆன்மீகம் வளர்க்கும் திமுக அரசை மதம் வளர்க்கும் பாஜகவால் என்றுமே வெற்றி கொள்ள முடியாது!
திருட்டு அயோக்கிய கட்சி ஆன்மீகத்சை வளர்குதாம்,
மகளிர் உரிமை தொகை என்ற திட்டத்தை நிறுத்தி விட்டு பின்னர் ஜெயித்து காட்ட சொல் பார்ப்போம் ஓட ஓட விரட்டி விடுவார்கள்
கடவுள் இல்லை இல்லவேயில்லை என்ற கொள்கையை கடைபிடிப்பவர்கள் ஆன்மீகத்தை வளர்க்கிறார்களா..? கோவில் பணத்தை சுருட்ராங்களா..?
ஏ..வ்..வ்
எந்த அறிவிப்பையும் நம்ப முடியலை. அதுக்குள்ள விஞ்ஞான திருட்டு தனம் ஏதாவது கண்டிப்பா இருக்கும். மேலோட்டமா பார்த்தால் உலகம் செழிக்க நல்லது பண்ற மாதிரி இருக்கும்.
மனிதர்கள் தங்களைப் போலவே மற்ற ஜீவராசி களையும் அதாவது அனைத்து உயிரினங்களிடத்திலும் கருணையுடன் கூடிய அன்பினை செலுத்தவேண்டும் ...இதுதான் வள்ளலார் சொன்ன ஜீவ காருண்யம் ....
சென்னையில் மட்டும் எழுபதாயிரம் படு அசுத்த பிரியாணி கடைகள் .....ஊரெங்கும் டாஸ்மாக் கஞ்சா போதை .....வள்ளலார் சொன்ன அடிப்படை விஷயமே ஜீவ காருண்யம் ......கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தும் கும்பலுக்கு வள்ளலார் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்குது?? ....மேலும்
-
திமுக எம்பி டிஆர்பாலு மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர்வேன்: அண்ணாமலை அறிவிப்பு
-
நீதிபதி மீது அரிவாள் வீச்சு... நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
நடிகை திரிஷா குறித்த பேச்சு: நயினார் நாகேந்திரன் வருத்தம்
-
தமிழக பொருளாதாரத்தில் வேளாண்துறையின் பங்களிப்பு குறைவு; ஜெயரஞ்சன்
-
வங்கக் கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் பிப்ரவரி 21,22ல் மழைக்கு வாய்ப்பு
-
நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்; அமித்ஷா இறுதி கெடு