சென்னையில் மஹா சிவராத்திரி விழா

சென்னை: சென்னை அம்பத்தூர் ஜிகே ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளி மைதானத்தில் மாலை 6 மணி முதல் பிப். 16 காலை 6 மணிவரை மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் ;
12 ஜோதிர் லிங்கங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டது. ஹரித்துவாரில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரால் திரளானவர்கள் அபிஷே கம் செய்தனர்.
4 கால பூஜையுடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிவபுராணம் பாடினர் . குடும்பத்துடன் சங்கல்பம், சிறப்பு பூஜை, ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் அன்னதானம் நடந்தது. ருத்ராஷ, வில்வ, விபூதிபிரசாதம் வழங்கப்பட்டன.
ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எல்.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தார் .

Advertisement