தமிழகத்தை உலுக்கிய விபத்து; தூத்துக்குடியில் பைக் மீது சுற்றுலா வேன் மோதியதில் 5 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தில் சேர்ந்த குருசாமி(40), முத்துலட்சுமி (48), சுமித்ரன் (3), முகில் (5) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் ஆகியோர் பைக்கில் குளத்தூரில் இருந்து பல்லாவரம் கிராமத்திற்கு
சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிழக்கு கடற்கரை சாலையில், சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த சுற்றுலா வேனும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த ஐந்து பேரின் உடலை மீட்ட குளத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா வேன் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
bharathi - ,
16 பிப்,2026 - 11:46 Report Abuse
certainly the bike must be driven on opposite side ...but this is very tragic the van must have watched and stopped it. in Highway this is every day affair 0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
16 பிப்,2026 - 07:46 Report Abuse
indian public lacks civic sense leading to many deaths. nobody follows road safety rules, wrong side driving is common. red signal jump is a routine. road side urination is very pathetic. occupying road by hawkers is horrible, blocking the pedestrian path, cannot cross roads using zebra crossing. traffic police is simply watching and looting. real shame 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
16 பிப்,2026 - 04:56 Report Abuse
பைக்கில் ஐந்து பேரா? அப்போ அங்கிருக்கும் காவல்துறை பணிசெய்யவில்லை என்பதுதானே அர்த்தம், வேன் ட்ரைவரை கைது செய்ததிற்கு பதிலாக அங்கிருந்த பணி செய்யாத காவலர்களை தானே கைது செய்திருக்க வேண்டும்? 0
0
Reply
அப்பாவி - ,
16 பிப்,2026 - 01:18 Report Abuse
பைக்கில் அஞ்சு பேரா?சர்க்கஸ் மாதிரி இருக்கு. 0
0
Reply
முத்துக்குமார் தூத்துக்குடி - ,
15 பிப்,2026 - 21:41 Report Abuse
ஆழ்ந்த இரங்கல் 0
0
Reply
மேலும்
-
தமிழக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
-
தகவல் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
-
விடைபெற்றார் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்!
-
இபிஎஸ்சை வீட்டில் சென்று சந்தித்த மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன்!
-
அடுத்த தலைமுறை விமான இன்ஜின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்; ராஜ்நாத் சிங்
-
அதிமுக சின்னம் குறித்த வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி
Advertisement
Advertisement