ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்த இந்தியா சம்மதம்; சொல்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதைக் கண்டித்து இந்தியாவுக்கு கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். மேலும், ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், இந்தியா தனது இறக்குமதியை நிறுத்தவில்லை.
இதனிடையே, இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது. மேலும், இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைத்த அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக கூறினார். தொடர்ந்து, எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் நாட்டின் நலன்கள் தான் முக்கியம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த இந்தியா உறுதியளித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில், கூடுதல் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
எனினும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ, விளக்கமோ வெளியாகவில்லை.
அம்பானி சொல்லோனும் அப்புறம் மோடி சொல்லோனும் அப்புறம் தான் எல்லாம் ...
இவனுங்களுக்கு, பொய் சொல்வதை விட்டால் வேறு எதுவுமே தெரியாதா? அடேய் என் வீட்டு விஷயம் நான் தீர்மானிக்கிறேன் என்கிற மனிதர்கள் இங்கு ஆட்சியில் இருக்கிறார்கள். நீ உன் வாயை மூடிக்கொண்டு போ
ஏங்க தமாஷ் பன்னீட்டு??
அதான் முனிக் கூட்டத்தில் ஜெய்ஷங்கர் தெளிவா சொல்லிட்டாருள்ள.. இந்தியாவிற்கு எங்கு மலிவாக கிடைக்கிறதோ அங்கு வாங்குவோம் ...அவரு ரஷ்யாவையும் சேர்த்து தான் சொல்றாரு .... இந்தியா வாங்காதுன்னு சொல்றதுக்கு நீ யாரு ?
நிறுத்துறதா இந்தியா சொல்லலைன்னு ரஷியா சொல்லுது. நிறுத்துவோமா மாட்டோமான்னு தெரியாதுன்னு இந்தியா சொல்லுது.மேலும்
-
தமிழக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
-
தகவல் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
-
விடைபெற்றார் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்!
-
இபிஎஸ்சை வீட்டில் சென்று சந்தித்த மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன்!
-
அடுத்த தலைமுறை விமான இன்ஜின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்; ராஜ்நாத் சிங்
-
அதிமுக சின்னம் குறித்த வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி