உடல்நலம் பாதிப்பு: பஞ்சாப் முதல்வர் 'அட்மிட்'
சண்டிகர்: திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியை சேர்ந்த பக்வந்த் மான் உள்ளார். மஹா சிவராத்திரியையொட்டி, சங்ரூர் மாவட்டம் துரியில் உள்ள ரங்கேஸ்வர் மஹாதேவ் சிவன் கோவிலில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவாலுடன் சென்று நேற்று தரிசனம் செய்தார்.
இதையடுத்து திடீரென உடல் நலம் குன்றியதால், மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மான் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து டாக்டர்கள் இதுவரை எதுவும் கூறவில்லை.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில், இதயத்துடிப்பு குறைந்ததாலும், பாக்டீரியா தொற்று பாதிப்பாலும் அவதிப்பட்ட மான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மேலும்
-
திமுக எம்பி டிஆர்பாலு மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர்வேன்: அண்ணாமலை அறிவிப்பு
-
நீதிபதி மீது அரிவாள் வீச்சு... நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
நடிகை திரிஷா குறித்த பேச்சு: நயினார் நாகேந்திரன் வருத்தம்
-
தமிழக பொருளாதாரத்தில் வேளாண்துறையின் பங்களிப்பு குறைவு; ஜெயரஞ்சன்
-
வங்கக் கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் பிப்ரவரி 21,22ல் மழைக்கு வாய்ப்பு
-
நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்; அமித்ஷா இறுதி கெடு