டில்லியில் ஏஐ மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
புதுடில்லி: டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 5 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
ஏஐ மாநாடு கடந்த 2023 ல் பிரிட்டனின் பக்கிங்ஹாம் பிளெச்சலி பூங்காவில் நடந்தது. 2024 ல் தென் கொரியதலைநகர் சியோலிலும், 2025 ல் பிரான்ஸ் தலைநகர் பாரீசீலும் நடந்தது.
இதனைத் தொடர்ந்து நமது தலைநகர் டில்லியின் பாரத் மண்டபத்தில் இம்மாநாடு துவங்கியது. இம்மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இம்மாநாடு வரும் 20ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
மாநாட்டை முன்னிட்டு, ஏஐ கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 19ம் தேதி நடக்கும் அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இம்மாநாட்டில் ஐநா பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டரஸ் கலந்து கொள்கிறார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் , இலங்கை அதிபர் திசநாயக்கா, பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர், பிராட் ஸ்மித், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
மனித வள மேம்பாடு, சமுக மேம்பாடு, பாதுகாப்பான ஏஐ தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி, பதுமை கண்டுபிடிப்பு, உள்ளிட்ட 7 துறைகள் குறத்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும்
-
தமிழக அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை; உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
-
தகவல் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
-
விடைபெற்றார் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்!
-
இபிஎஸ்சை வீட்டில் சென்று சந்தித்த மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன்!
-
அடுத்த தலைமுறை விமான இன்ஜின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்; ராஜ்நாத் சிங்
-
அதிமுக சின்னம் குறித்த வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி