குளிர்கால ஒலிம்பிக்: ஆரிப் கான் 39வது இடம்

மிலன்: குளிர்கால ஒலிம்பிக் 'ஆல்பைன்' பனிச்சறுக்கு, 'ஸ்லாலோம்' பிரிவில் இந்திய வீரர் ஆரிப் கான் 39வது இடம் பிடித்தார்.


இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 'ஆல்பைன்' பனிச்சறுக்கு, 'ஸ்லாலோம்' பிரிவில் இந்தியாவின் ஆரிப் கான் 35, பங்கேற்றார். இலக்கை 2 நிமிடம், 41.60 வினாடியில் கடந்த இவர், 39வது இடம் பிடித்தார்.

இது, குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்களுக்கான 'ஆல்பைன்' பனிச்சறுக்கு, 'ஸ்லாலோம்' பிரிவில் இந்திய வீரரின் சிறந்த செயல்பாடானது. இதற்கு முன், 1988ல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் இந்திய வீரர் கிஷோர் ரத்னா ராய் (2 நிமிடம், 52.21 வினாடி) 49வது இடம் பிடித்திருந்தார். தவிர, 1988ல் இந்திய வீராங்கனை ஷைலஜா குமார் (2 நிமிடம், 52.27 வினாடி) 28வது இடம் பிடித்தது, குளிர்கால ஒலிம்பிக் 'ஆல்பைன்' பனிச்சறுக்கு, 'ஸ்லாலோம்' பிரிவில் இந்திய நட்சத்திரத்தின் சிறந்த செயல்பாடானது.


குளிர்கால ஒலிம்பிக்கில் 12வது முறையாக (1964-2026) பங்கேற்ற இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. இம்முறை பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் ஸ்டான்சின் லுண்டப் ('கிராஸ் கன்ட்ரி' பனிச்சறுக்கு, 10 கி.மீ., 'பிரீஸ்டைல்') 104வது இடம் பிடித்தார்.

Advertisement