தமிழ் வாசிக்கும் மாணவர்களின் திறன் அதிகரிப்பதை பார்க்கிறோம்

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், வாசிப்பு பழக்கத்திற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் 'தினமலர்' நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்காக சிறப்பாக வெளியிடப்படும் 'பட்டம்' மாணவர் இதழ் குழுவினருக்கும் ஆச்சார்யா பள்ளியின் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

தினமலர்-பட்டம் சார்பில, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்காக நடத்தப்படும் வினாடிவினா போட்டியில், எங்கள் ஆச்சாரியா தேங்காய்திட்டு பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு, இரண்டாம் பரிசு பெற்றது எனக்கு மிகந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய்மொழியான தமிழில் செய்திகளை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் உருவாக்குவதன் மூலம், அவர்களின் புரிதல் திறன், சிந்தனை ஆற்றல், சொல்வளம், வாசிப்பு ஆர்வம் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருவதை நாங்கள் நேரடியாக காண்கிறோம். மேலும், மாணவர்கள், தங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கையுடன் சிந்திக்கவும் பட்டம் வாசிப்பு உதவுகிறது.

பட்டம் இதழ், மாணவர்களின் வயதுக்கும் புரிதலுக்கும் ஏற்ற வகையில் கல்வி, அறிவியல், சமூகம், வரலாறு, நடப்பு நிகழ்வுகள் போன்ற பல்வேறு தலைப்புகளை எளிய, இனிய தமிழில் வழங்கி மாணவர்களை தினசரி வாசிப்புக்கு ஊக்குவிப்பது மிகப் பெரிய சாதனை.

பட்டம் இதழ், மாணவர்களை புத்தக வாசிப்பிலிருந்து செய்தித்தாள் வாசிப்பிற்கும், அங்கிருந்து ஆழமான சிந்தனைக்குமான பயணத்திற்கும் அழைத்துச் செல்கிறது என்பதில் சந்தேகமில்லை. பட்டம், மாணவர்களின் சிந்தனையில் பதியும் ஒரு சிறந்த முயற்சி. இதனை உருவாக்கி வழங்கும் தினமலர் குழுவினருக்கு, ஆச்சார்யா பள்ளி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தினமலர் தனது 75 ஆண்டில் பயணித்துக்கொண்டு இருக்கிறது. மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கான அதன் முயற்சிகள் பல்லாண்டு தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.



ஜெ. அரவிந்தன்

நிர்வாக இயக்குனர், ஆச்சார்யா கல்விக் குழுமம், புதுச்சேரி

Advertisement