9 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேல் செல்லும் மோடி
ஜெருசலேம் : பிரதமர் நரேந்திர மோடி, ஒன்பது ஆண்டுகளுக்கு பின், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு செல்ல இருக்கிறார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுடன், ராணுவத் தளவாடங்கள் தொடர்பாக இந்தியாவுக்கு வலுவான உறவு உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுடனான போரின்போது, உலக நாடுகள் இஸ்ரேலை கண்டித்தன. ஆனால், இந்தியா நடுநிலை வகித்தது.
இறுப்பினும், இஸ்ரேலுடன் இருதரப்பு உறவுகள் வழக்கம் போல் வலுவாக உள்ளன. இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் 25ம் தேதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “பார்லி., கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது. அதில் இந்திய பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு,” என குறிப்பிட்டார்.
மேலும்
-
மகளிர் உரிமைத் தொகை எடுக்க வங்கியில் குவிந்த பெண்கள்
-
தாழையூர் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
-
குறைதீர் கூட்ட அரங்கம் அதிகாரிகள் வராததால் வெறிச்சோடியது சிவகங்கையில் மனுக்களுடன் வந்தோர் ஏமாற்றம்
-
குறைதீர் கூட்ட அரங்கம் அதிகாரிகள் வராததால் வெறிச்சோடியது சிவகங்கையில் மனுக்களுடன் வந்தோர் ஏமாற்றம்
-
மகா சிவராத்திரி தேரோட்டம்
-
புறநானுாறு பாடல் எழுதும் போட்டி