ஆடவல்லீஸ்வரர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் ஆடவல்லீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை (22ம் தேதி) நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் 1400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரகன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை (22ம் தேதி) நடக்கிறது.

விழாவையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜை தொடங்கியது. இன்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:30 மணி முதல் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

தொடர்ந்து நாளை 22ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 11:00 மணிக்கு ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். 11:20 மணிக்கு மூலஸ்தான பஞ்சமூர்த்திகள் மகா கும்பாபிஷேக தீபாராதனை நடக்கிறது.

Advertisement