இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும்; அமித்ஷா உறுதி
குவஹாத்தி: மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
வடகிழக்கில் முதன்முறையாக குவஹாத்தியில் நடந்த 87வது சிஆர்பிஎப் தின அணிவகுப்பில் பங்கேற்ற அமித்ஷா பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது. மணிப்பூரில் இன வன்முறையைக் கையாளவும், நக்சலைட்டுகளின் முதுகெலும்பை உடைக்கவும் பாதுகாப்பு படை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மூன்று ஆண்டுகளில் சிஆர்பிஎப் முக்கிய பங்கு வகித்துள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலைட்டுகள் இல்லாத நாடாக மாறும். நாட்டிலிருந்து நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்படும். இதனை நான் சிஆர்பிஎப் வீரர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையில் கூறுகிறேன்.
சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் உள்ள கர்ரெகுடா மலைகளில் 21 நாள் ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையில் நக்சலைட்டுகள் 31 பேர் கொல்லப்பட்டனர். 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், தினமும் 15 லிட்டர் தண்ணீர் வியர்வையில் வீணாகும்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், நக்சலைட்டுக்களின் பிடியிலிருந்து மலையை விடுவிப்பதற்காக, அவர்களின் கோட்டையை இடித்துத் தள்ள, துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் எதிர்கொண்டனர்.
10, 11 ஆண்டுக்கு முன், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், நக்சலிசம் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி நடந்தது. இப்போது அமைதியான சூழல் உருவாகிவிட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
வாசகர் கருத்து (8)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21 பிப்,2026 - 19:53 Report Abuse
நல்லது. அடுத்து இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக மாற்றவேண்டியதும் உங்கள் பொறுப்பு. அது கொஞ்சம் சிரமம்தான். இருந்தாலும் முயற்சி செய்யுங்கள். மக்கள் உங்களுக்கு துணைநிற்பார்கள். 0
0
Chinnappan Arulappan - ,இந்தியா
21 பிப்,2026 - 21:41Report Abuse
முதலில் கோடிக்கணக்கில் ஊழல் தேர்தல் நிதி வாங்காமல் இருக்க வேண்டும் 0
0
Reply
Chinnappan Arulappan - ,இந்தியா
21 பிப்,2026 - 19:05 Report Abuse
இவரது வேஷத்தை பார்த்து பயந்து எல்லோரும் பக்கத்து நாட்டுக்கு ஓடி விடுவார்கள் சூப்பர் 0
0
guna - ,
21 பிப்,2026 - 21:25Report Abuse
அவர் குடும்பத்தில் அனைவரும் ஓடிவிட்டார்கள் 0
0
Reply
sundararajan - bangalore,இந்தியா
21 பிப்,2026 - 18:26 Report Abuse
ஐயா இதை விடப் பெரிய பயங்கரவாதம், பங்க்ளாதேஷிலிருந்து தமிழகம் மற்றும் அனைத்து இந்தியப் பகுதிகளிலும் வந்து பதுங்கியுள்ள கள்ளக் குடியேறிகள்.அவர்களை வேறோடு களைய தீவிர முயற்சி எடுங்கள். 0
0
Reply
Viswanathan B N - ,இந்தியா
21 பிப்,2026 - 18:04 Report Abuse
அது தான் பழைய கதை ஆச்சே.
காங்கிரஸ் எடுக்கற புது கதை க்கு போங்க. அதாவது அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விளைவாக இந்தியா அமெரிக்காவிடம் அடி பணிந்து விட்டது 0
0
Reply
Sankar Ramu - Carmel,இந்தியா
21 பிப்,2026 - 17:28 Report Abuse
தமிழகத்தில் உள்ள திராவிட நக்சலைட்டுகளை எப்போது ஒழிப்பது? 0
0
Reply
அரவழகன் - ,
21 பிப்,2026 - 16:51 Report Abuse
காங்கிரஸ் இல்லாத பாரதம்
என்னாச்சு...? 0
0
Reply
மேலும்
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
-
நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்
-
நக்சல் முக்கிய தளபதி தெலங்கானா போலீஸில் சரண்
-
கோவை ஏர்போர்ட் விரிவாக்கம் 2028ல் நிறைவேறுவது சாத்தியமா?; கலெக்டர் புறக்கணிப்பால் தொழில் அமைப்புகள் அப்செட்
-
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
-
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் எச்சரிக்கை ; விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
Advertisement
Advertisement