ஓம் குரு கணேசா பள்ளி ஆண்டு விழா

திருக்கோவிலுார்: காட்டுச்செல்லுார் ஓம்குரு கணேசா மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.

திருக்கோவிலுார் அடுத்த காட்டுச்செல்லுார் ஓம்குரு கணேசாம் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு, மேலாண்மை குழு தலைவர் விக்ரண்ட்பாபு தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை இயக்குனர் ஜானகி முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் கோமதி வரவேற்றார். பள்ளி முதல்வர் கிருத்திகா ஆண்டறிக்கை வாசித்தார்.

பள்ளி நிறுவனர் மணிமொழி மாணவர்களுக்கு கல்வி மற்றும் ஒழுக்கம் குறித்து விளக்க உரையாற்றினார். தியாகதுருகம் கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

துணை முதல்வர் ராஜசேகர் நன்றி கூறினார்.

Advertisement