அமெரிக்க கோர்ட் தீர்ப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை

திருப்பூர்: அதிபர் டிரம்ப்பின் வரி உயர்வு அறிவிப்பை, அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளதால், இந்தியாவுக்கான வரி மேலும் குறைய வாய்ப்புள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரி விதிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அதிபர் டிரம்ப்பின் வரி உயர்வுகளை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''கூடுதலாக வசூலித்த வரியை திருப்பி செலுத்தவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது; வர்த்தகர்கள் செலுத்திய தொகை திரும்ப கிடைக்கும். சிரமம் குறையும்,'' என்றார்.

Advertisement