மிதக்கும் சூரிய மின்சார உற்பத்தி திட்டம் நீர்நிலைகளை அடையாளம் காண வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
புதுடில்லி: மிதக்கும் சூரிய மின்சார உற்பத்தி திட்டங்களுக்கு நீர்நிலைகளை அடையாளம் கண்டு தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நம் நாட்டில் மிதக்கும் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், நீர்நிலைகளை அடையாளம் கண்டு முன்னுரிமை வழங்குமாறு மாநிலங்களுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 700 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
ஆனால் உலக வங்கி மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 280 முதல் 300 ஜிகாவாட் வரை மிதக்கும் சூரிய மின் உற்பத்தி திறன் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மிதக்கும் சூரிய மின்சார உற்பத்தி திறன் மதிப்பீட்டு அறிக்கை குறித்து, கடந்த 20ம் தேதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆலோசனை கூட்டம் நடத்தியது.
தேசிய சூரிய எரிசக்தி நிறுவனமான நைஸ் மற்றும் ஐ.ஐ.டி., ரூர்கேலா ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இத்திட்டத்துக்கான வரைவு அறிக்கைகள் பார்வைக்கு இடம்பெற்றன.
மாநிலங்களின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு மிதக்கும் சூரிய மின் உற்பத்தி கொள்கை குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய ஈரநில ஆணையம் மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த நிலப்பரப்பு பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், நீர்நிலைகளின் மீது சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் மாற்று வாய்ப்பாக உருவெடுத்துஉள்ளன.
ஆனால், சாத்தியமான இடங்கள் குறித்த தரவுகள் இல்லாமை மற்றும் திட்ட செயல்பாட்டு கட்டமைப்பு பற்றாக்குறை காரணமாக இத்திட்டங்களின் வளர்ச்சி மந்தமாக இருப்பதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, மிதக்கும் சூரிய மின் திட்டங்களை முன்னெடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தகுந்த நீர்நிலைகளை அடையாளம் கண்டு முன்னுரிமை வழங்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது.
ர்நிலைகள் மீது சோலார் பேனல்களை அமைத்து, மின் உற்பத்தி செய்யும் திட்டத்தில் பேனல்களை அமைக்க நிலப்பரப்பின் தேவை இல்லாமல் போவதுடன், நீர்நிலைகள் மீது நேரடியாக வெப்பம் படாமல், எளிதில் நீர் ஆவியாவதும் தவிர்க்கப்படும்.
முதலில் ஸ்டிக்கர் பிறகுதான் திட்டம்
அருமையான திட்டம் மாநில அரசுகள் ஊழல் செய்யாமல் நடைமுறை படுத்தினால் மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லது செய்வார்களா? மோடி அரசு தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை அறிவிக்கிறது, தேவையான பண உதவியையும் கொடுக்கிறது - ஆனால் அமல் படுத்தா விட்டால் மோடி அரசு என்ன செய்ய முடியும்? மக்கள் முடிவெடுக்க வேண்டும் - 2026 தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், நிச்சயமாக வாக்களிக்க வேண்டும் ஜெய் பாரத் ஜெய் மோடி ஜெய் பிஜேபி
Sticker govமேலும்
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
-
நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்
-
நக்சல் முக்கிய தளபதி தெலங்கானா போலீஸில் சரண்
-
கோவை ஏர்போர்ட் விரிவாக்கம் 2028ல் நிறைவேறுவது சாத்தியமா?; கலெக்டர் புறக்கணிப்பால் தொழில் அமைப்புகள் அப்செட்
-
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
-
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் எச்சரிக்கை ; விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா