காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே காரில் மது பாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார், நேற்று காலை கெங்கராம்பாளையம் செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுச்சேரி பகுதியிலிருந்து வந்த ஒரு காரை சோதனை செய்ததில் விழுப்புரத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.

விசாரணையில், காரில் வந்தவர்கள் புதுச்சேரி மாநிலம், பங்கூர், செல்வா நகரைச் சேர்ந்த பாலசுந்தரம், 54; சின்னையன்பேட்டை கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், 40; என்பதும் தெரிந்தது.

இதனையடுத்து, விழுப்புரம் மதுவிலக்கு போலீசார், இருவரையும் கைது செய்து, 1,200 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement