ஆதிதிராவிடர், பழங்குடி இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுகலை பயிற்சி வழங்கல்
கள்ளக்குறிச்சி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுகலை பயிற்சி வழங்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுகலை பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரையும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
ராணிப்பேடை, கோயம்புத்துார் மாவட்டத்தில் 90 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி பங்கேற்க தங்கு வசதிகள், உணவுகள் உட்பட செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப் படும்.
பயிற்சி முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சியில் சேருவதற்கு தகுதியான நபர்கள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் உள்ளது.
மேலும்
-
மாமதுரைக்கு மேலும் இரண்டு பாலங்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா வாழ்த்தும்; அமைச்சர் ரகுபதி
-
இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும்; அமித்ஷா உறுதி
-
பாஜவின் பிடிக்குள் அதிமுக போய்விட்டது; திருமாவின் இன்றைய குறி!
-
ஏஐ., பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு மீது உலகநாடுகள் முழு நம்பிக்கை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கு; பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்