மாநில கலை திறன் போட்டி வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

திருக்கோவிலுார்: மாநில அளவில் நடந்த கலை திருவிழா போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருக்கோவிலுார் வடக்கு வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 2025- 26ம் கல்வி ஆண்டில், மாநில அளவில் நடந்த கலை திருவிழா போட்டியில் 8ம் வகுப்பு மாணவர் ஸ்ரீராம் மணல் சிற்ப போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். அதேபோல் 5ம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ ஓவியப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார்.

இவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் குமுதவல்லி வரவேற்றார். முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க நிர்வாகிகள் முஜீர்கான், கல்யாண்குமார், ராமச்சந்திரன், சீதாபதி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

பயிற்சி அளித்த ஓவிய ஆசிரியர் செல்வத்திற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் ராணுவ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement