கார் மோதி பெண் பலி போலீஸ் விசாரணை
வானுார்: கிளியனுார் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி பெண் இறந்தார்.
கிளியனுார் அடுத்த எறையானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள். 50; இவர் நேற்று மாலை எறையானூர் மேம்பாலம் பகுதியில் திண்டிவனம் - புதுச்சேரி சாலையை கடந்த போது திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் அன்னமாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த பெண்ணின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வில் சேர வந்த அழைப்புக்கு ஓ.பி.எஸ் மறுப்பு!
-
மிதக்கும் சூரிய மின்சார உற்பத்தி திட்டம் நீர்நிலைகளை அடையாளம் காண வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
-
அமெரிக்க கோர்ட் தீர்ப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை
-
மதுரை எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் பின்னாக்கிள் இன்போடெக் துவக்கம் 2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு
-
சுற்றுலா திட்டங்களுக்கு தமிழக அரசு டெண்டர்
-
தமிழக அரசை கண்டித்து பா.ஜ., இளைஞரணி ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement