உலக தாய் மொழிநாள் உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை ஏற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்,21ம் தேதி உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அரசு கலை அறிவியல் கல்லுாரி கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு அனைவரும் உலக தாய்மொழிநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் தர்மராஜா, உறுதி மொழி வாசிக்க, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியை கல்லுாரி கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.

Advertisement