அமெரிக்க வரி விதிப்பு இனி 10 சதவீதம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், உலக நாடுகளுக்கான வரி விதிப்பு இனி 10 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கள் நாட்டுக்கு வர்த்தக பற்றாக்குறை இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தாறுமாறாக வரிகளை விதித்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி, இந்தியாவுக்கு 50 சதவீதம் வரிகளை விதித்தார். இதேபோல, வெவ்வேறு காரணங்களை கூறி, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுளுக்கும் வரி விதித்தார். இப்படி வரி விதிப்பதற்கு அதிபருக்கு அதிகாரம் இல்லை; அவரது முடிவுகள் சட்ட விரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறி விட்டது.
இதையடுத்து, அனைத்து நாடுகள் மீதான வரி விதிப்பும், இப்போது 10 சதவீதம் என்றே கணக்கிடப்படும் என்று அமெரிக்க வரித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், இந்தியப் பொருட்கள் மீதான வரி விதிப்பும், இனி 10 சதவீதமாகவே இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வரி விதிப்பு விவகாரத்துக்கு பிறகு, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், பிரிட்டன் என அனைத்து நாடுகளுக்கும் இனி வரி 10 சதவீதம் என்றே கணக்கிடப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள, முதல் கட்ட உடன்பாடு ஏற்படுத்திக் கொண்ட இந்தியாவுக்கு 18 சதவீதம் வரி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் இனி மேல் 10 சதவீதமாக இருக்கும் என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரம்ப் வரி விதிப்புக்கு முன்னதாக இருந்த 3.5 சதவீதம் வரி விதிப்பும் கூடுதலாக வசூலிக்கப்படுமா அல்லது, 10 சதவீதம் மட்டும் வசூலிக்கப்படுமா என்பது பற்றி தெளிவான விளக்கத்தை இன்னும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை.
தற்போது வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரியை திருப்பித் தர வேண்டிய நிலைக்கு அமெரிக்க அரசு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இந்த தொகை மட்டும் 140 பில்லியன் டாலர்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (13)
yasomathi - cbe,இந்தியா
21 பிப்,2026 - 15:00 Report Abuse
அட்வான்ஸ் ஆக ஒரு அமௌன்ட் கட்டிவிட்டு ரஷ்யாவிடம் க்ரூட் ஆயில் இறக்குமதி செய்யலாம் .... ட்ரம்பு நீ தூக்குல தொங்கு ... 0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
21 பிப்,2026 - 14:40 Report Abuse
ஈசனே எம்பெருமானே திங்கள் முதல் மார்க்கெட் மேலே போக நீங்க தான் அருள் புரியனும். திரும்ப இவரு ஏதாவது போர் னு ஆரம்பிச்சி எல்லாம் இறக்கி விட்டுடாம காப்பாத்துங்க 0
0
Reply
A.Gomathinayagam - chennai,இந்தியா
21 பிப்,2026 - 14:22 Report Abuse
இந்தியா ஏற்றுமதியார்களுக்கு லாபம் தான் 0
0
Reply
Gopal Kadni - ,
21 பிப்,2026 - 14:14 Report Abuse
தன்மான சிங்கம், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வாரா? இங்கே உள்ள அடிமைகளை நிர்கதியில விட்டாரே. 0
0
Reply
GMM - KA,இந்தியா
21 பிப்,2026 - 14:14 Report Abuse
வரி விதிப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தலாம். 9 பேர் கொண்ட அமர்வாக இருந்தாலும் ரத்து செய்ய அதிகாரம் இருக்காது. சரியோ, தவறோ பொருளாதாரம் சாராத நீதிபதி மன்றம் ரத்து செய்ய அனுமதி கூடாது. உடனடி பொருளாதார தாக்கம் ஏற்படும். டிரம்ப் தனது அதிகாரம் கொண்டு நீதிபதி சம்பளம் நிறுத்தலாம். அதிகாரம் தவறாக பயன்படுத்திய காரணத்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்.அல்லது டிரம்ப் ராஜினாமா செய்ய வேண்டும். யாராவது ஒருவர் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
21 பிப்,2026 - 13:39 Report Abuse
கோமாளியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது!? 0
0
Reply
ManiK - ,
21 பிப்,2026 - 13:13 Report Abuse
5th grade கூட பாஸ் ஆகாத இந்த ட்ரம்பு உலகத்தையே ஆட்டிபடைக்கிரான் ஐயா. நம்ம ராவூல், ஸ்தாலின், உதைய்யா எல்லாரும் போய் அமெரிக்க அதிபரை அடக்க வேண்டும். 0
0
Reply
Anand - chennai,இந்தியா
21 பிப்,2026 - 13:05 Report Abuse
என்னது, எனக்கு எதிராக தீர்ப்பா? இப்போதே போடுகிறேன் சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் மீது 500 சதவிகித வரி. 0
0
Reply
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21 பிப்,2026 - 12:55 Report Abuse
இனிமேல் இந்தியா ருஷ்யாவிடம் கட்சா எண்ணெய் வாங்கினாலும் பத்து சதவீத வரிதான் விதிக்கமுடியும். இந்தியாவுக்கு இரட்டிப்பு லாபம். 0
0
Reply
S.L.Narasimman - Madurai,இந்தியா
21 பிப்,2026 - 12:29 Report Abuse
நிர்வாகத்திறமையில் டிரம்ப் நம்ம விடியல் சுடாலினிக்கே டப் பைட் கொடுப்பார் போலிருக்கே. 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
மாமதுரைக்கு மேலும் இரண்டு பாலங்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜயகாந்த் ஆத்மா வாழ்த்தும்; அமைச்சர் ரகுபதி
-
இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும்; அமித்ஷா உறுதி
-
பாஜவின் பிடிக்குள் அதிமுக போய்விட்டது; திருமாவின் இன்றைய குறி!
-
ஏஐ., பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு மீது உலகநாடுகள் முழு நம்பிக்கை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கு; பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்
Advertisement
Advertisement