கால்பந்து: மணிஷா கலக்கல்
சாண்டியாகோ: தென் அமெரிக்க கிளப் அணிக்காக கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனை ஆனார் மணிஷா கல்யாண்.
சிலியின் சாண்டியாகோ நகரில் தென் அமெரிக்க கிளப் அணிகள் மோதிய நட்பு போட்டி நடந்தது. இதில் பெருவின் அலியான்சா லிமா, சிலியின் யுனிவர்சிடாட் கேடோலிகா அணிகள் பங்கேற்றனர்.
இந்திய வீராங்கனை மணிஷா கல்யாண், அலியான்சா லிமா அணிக்காக பங்கேற்றார். போட்டி துவங்கிய 18 வது நிமிடத்தில் சக வீராங்கனை கொடுத்த பந்தை பெற்ற மணிஷா, அதேவேகத்தில் கோலாக மாற்றினார். இதையடுத்து தென் அமெரிக்க கிளப் அணிக்காக கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனை என பெருமை பெற்றார் மணிஷா.
22வது நிமிடத்தில் சக வீராங்கனை கோல் அடிக்க உதவினார் மணிஷா. இப்போட்டியில் அலியான்சா லிமா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுவுக்கு தான் பயம்: இபிஎஸ்
-
ஏஐ மாநாட்டை இழிவான அரசியல் தளமாக மாற்றிய காங்கிரஸ்: பிரதமர் மோடி கண்டனம்
-
பாக்., எல்லை அருகே இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூட்டில் பலி; பயங்கரவாதிகள் செயலா என விசாரணை
-
பெரம்பூரில் விஜய் போட்டி?
-
3 விக்கெட்டை இழந்து தென் ஆப்ரிக்கா தடுமாற்றம்; இந்தியா சிறப்பான பந்துவீச்சு
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement