கோழி இறைச்சி ஏற்றுமதிக்கு பிரேசில் விருப்பம்

இந்தியாவுக்கு குறைந்த வரியில் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்ய விரும்புவதாகவும், அதற்கு பதிலாக பழங்களை இறக்குமதி செய்து கொள்வதாகவும் பிரேசில் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் வேளாண் துறை தெரிவித்துள்ளதாவது:

உலகளவில் கோழி இறைச்சி உற்பத்தியில் பிரேசில் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவுக்கு அதிகளவில் விற்பனை செய்ய விரும்புகிறோம். ஆனால், இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக உள்ளது. கோழி இறைச்சி துண்டுகளுக்கு 100 சதவீத வரியும், முழு கோழி இறைச்சிக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

அதிக வரியால், கோழி இறைச்சியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. கடந்தாண்டில், 2.47 டன் தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான வர்த்தகம் கடந்தாண்டில் 1,500 கோடி ரூபாய்க்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 25.5 சதவீதம் அதிகம். அதனால், பிரேசில் கோழி இறைச்சியை இந்தியா இறக்குமதி செய்தால், அதற்கு பதிலாக மாதுளம் பழங்களையும், மக்காடாமியா நட்ஸ்களையும் பிரேசில் இறக்குமதி செய்யும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement