ஜார்க்கண்டில் 'ஏர் ஆம்புலன்ஸ்' விபத்து
ராஞ்சி: ஜார்க்கண்டின் ராஞ்சியில் இருந்து டில்லி புறப்பட்ட 'ஏர் ஆம்புலன்ஸ்' விமானம் விபத்தில் சிக்கியது. அதில் சென்ற நோயாளி ஒருவர் உட்பட ஏழு பேர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7:10 மணியளவில், 'ரெட் பேர்ட்' ஏர்வேசுக்கு சொந்தமான ஏர் ஆம் புலன்ஸ் புறப்பட்டது.
தீக்காயம் அடைந்த சஞ்சய் குமார், 41, என்பவரை ஏற்றிக்கொண்டு டில்லிக்கு புறப்பட்ட அந்த ஏர் ஆம்புலன்சில் டாக்டர், உதவியாளர்கள், விமான ஊழியர்கள் உட்பட ஏழு பேர் பயணித்தனர்.
புறப்பட்ட 20வது நிமிடத்தில் சத்ரா மாவட்டம் சிமாரியா அருகே சென்றபோது திடீரென அந்த ஏர் ஆம்புலன்ஸ், விமான போக்குவரத்து அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால், ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதாக அஞ்சப்படுகிறது. அதில் சென்ற ஏழு பேர் கதி என்னவானது என தெரியவில்லை. விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக ராஞ்சி விமான நிலைய இயக்குநர் வினோத் குமார் தெரிவித்தார்.
மேலும்
-
யாரு ஹீரோ?
-
ஆக்கிரமிப்பு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு
-
பொக்காபுரம் கோவிலுக்கு அரிசி கொண்டு செல்லும் நிகழ்ச்சி
-
ஆசிய பவர் லிப்டிங் போட்டியில் வெள்ளி வென்றவருக்கு பாராட்டு
-
ஓடோடம் வயல் பழங்குடியின கிராமத்தில் சிறப்பு முகாம்; பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் உறுதி
-
பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை