நாளை பாசஞ்சர் ரயில்கள் ரத்து

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம்- ராமநாதபுரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (பிப்., 23) இரு பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

ராமேஸ்வரம்- ராமநாதபுரம் இடையே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (பிப்., 23) காலை 7:07 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் பாசஞ்சர் ரயில் ராமேஸ்வரம் வராமல் ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனிலும் மற்றும் காலை 7:05 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வரும் பாசஞ்சர் ரயில் ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தப்படுகிறது.

இந்த இரு ரயிலில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு காலை 11:40 மணி, மதியம் 2:50 மணிக்கு திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாம்பன் பாலத்தில் மின் வழித்தடம் பராமரிப்பு: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் உள்ள புதிய ரயில் பாலத்தில் நேற்று மின்சார ரயில் இன்ஜின் மூலம் மின்சார வழித்தடம் பராமரிப்பு பணி நடந்தது.

இந்த பராமரிப்பு பணி மாதம் ஒருமுறை நடப்பது வழக்கம் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement